
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்தின் இந்துத்துவா கொள்கைகளின் தொடர்ச்சியாக, மும்பை வெர்சோவா பாந்திரா கடல் இணைப்பு பாலத்திற்கு வீர் சாவர்க்கர் சேது என்று பெயரிட அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்துத்துவா சித்தாந்தவாதியின் 140வது பிறந்தநாளான மே 28 அன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புக்கு (MTHL) அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்ம்ருதி நவா ஷேவா அடல் சேது என்று பெயரிடப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த இரண்டு பெயர்களும் இன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
கடலோர சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 17 கிமீ வெர்சோவா பாந்த்ரா கடல் இணைப்பு, அந்தேரியை பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்போடு இணைக்கும். MTHL மும்பை மற்றும் நவி மும்பையை இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெர்சோவா-பாந்த்ரா கடல் இணைப்பு பாலத்திற்கு சாவர்க்கரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சூழலில் மகாராஷ்டிர அமைச்சரவை இந்த பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவை அறிவித்த பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான சுதிர் முங்கந்திவார், பாலங்கள் தேசத்தின் இரண்டு பெரிய மனிதர்களின் பெயரை மாற்றியதால் எந்த சர்ச்சையும் இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்புக்கு அங்காங்கே SOS பூத்கள்! பெங்களூருவில் அசத்தல் திட்டம் அறிமுகம்!
விநாயக் தாமோதர் சாவர்க்கர் அல்லது வீர் சாவர்க்கர் ஒரு இந்து தேசியவாத தலைவர் ஆவார். மேலும் பாஜகவின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். எனவே வீர் சாவர்க்கருக்கு பாஜக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீப காலமாக வீர் சாவர்க்கர் தொடர்பான பல சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, வீர் சாவர்க்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி ஹெட்கேவார் உள்ளிட்டோர் பற்றிய அத்தியாயங்களை நீக்கி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களைத் திருத்துவதற்கு ஒப்புதல் அளித்தது.
இதனிடையே கடந்த மார்ச் மாதம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "என் பெயர் சாவர்க்கர் அல்ல, என் பெயர் காந்தி, காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார்" என்ற கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியது.
மேலும் மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள காங்கிரஸின் கூட்டாளியான உத்தவ் தாக்கரே, "நம் கடவுளை அவமதிப்பதை" நிறுத்தாவிட்டால், கூட்டணியில் "பிளவுகள்" ஏற்படும் என்று எச்சரித்திருந்தார். மேலும் “ அந்தமான் செல்லுலார் சிறையில் 14 ஆண்டுகளாக சாவர்க்கர் கற்பனை செய்ய முடியாத சித்திரவதைகளை அனுபவித்தார். துன்பங்களை மட்டுமே நாம் படிக்க முடியும். இது ஒரு வகையான தியாகம். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மைல்கல்! உலக அளவில் சிறந்த 150 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்து அசத்திய IIT மும்பை!!