Mumbai Curfew : மும்பையில் திடீரென ஒரு மாதம் ஊரடங்கு: காரணம் என்ன? மும்பை போலீஸார் திடீர் உத்தரவு

Published : Dec 02, 2022, 02:58 PM ISTUpdated : Dec 02, 2022, 03:02 PM IST
Mumbai Curfew : மும்பையில் திடீரென ஒரு மாதம் ஊரடங்கு: காரணம் என்ன? மும்பை போலீஸார் திடீர் உத்தரவு

சுருக்கம்

மும்பையில் திடீரென 144 தடை (ஊரடங்கு) உத்தரவை வரும் 4-ம் தேதி முதல் 2023, ஜனவரி 2ம் தேதிவரை பிறப்பித்து மும்பை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்

மும்பையில் திடீரென 144 தடை (ஊரடங்கு) உத்தரவை வரும் 4-ம் தேதி முதல் 2023, ஜனவரி 2ம் தேதிவரை பிறப்பித்து மும்பை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

மும்பையில் அமைதியை நிலைநாட்டவும், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் எந்த தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர்.

குஜராத் தேர்தல்: ரூ.750 கோடிக்கு நகைகள், பணம் பறிமுதல்:தேர்தல் ஆணையம் அதிர்ச்சி

இந்த உத்தரவின்படி, மும்பை நகரில் 5 நபர்கள் அதற்கு அதிகமாக யாரும் கூடக்கூடாது என்று போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

டிசம்பர் 4ம் தேதி முதல் 2023 ஜனவரி 2ம் தேதிவரை மும்பை நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவது,  பாடுவது, நடனமாடுவது அனைத்தும் தடை செய்யப்படுகிறது. கத்தி, துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் எடுத்துச் செல்லவும் போலீஸார் தடை வித்துள்ளனர்.

மும்பை போலீஸார் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வைரலாகியது. ட்விட்டரில் ஏராளமானோர் மும்பை போலீஸாருக்கும், மாநகராட்சி நிர்வாகத்தையும் டேக் செய்து உண்மையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பி சந்தேகத்தை தீர்க்க முயன்றனர்.

மாற்றத்துக்கு தயாராகிறதா பாஜக? தேசிய, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மிகப்பெரிய கூட்டம்

இதையடுத்து, மும்பை துணை ஆணையர் விஷால் தாக்கூர் அறிக்கை வெளியிட்டார். அதில் “ மும்பையில் டிசம்பர் 4ம் தேதி முதல் 2023, ஜனவரி 2ம் தேதிவரை எந்தவிதாமான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொது நிகழ்ச்சிகல் நடத்தவும், மக்கள் கூடவும், பெரியஒலிபெருக்கிகள் வைக்கவும் தடைவிதிக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. 

பொழுதுபோக்கிற்காக மக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவது தடை விதிக்கப்படுகிறது. 
அரசுஅலுவலகங்கள்,நீதிமன்றங்கள், உள்ளாட்சி நிர்வாகஇடங்களிலும், அரசுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் 5 நபர்கள் அல்லது அதற்கும் அதிகமாக கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது
பாட்டாசு வெடித்தல், சத்தமாக ஒலிபெருக்கி பயன்படுத்துதல்,இசைக் கருவிகல் ஒலித்தல், பேண்ட் போன்றவை தடை செய்யப்படுகிறது

சிபிஐ, அமலாக்கப்பிரிவு மூலம் தேர்தலில் மோடியால் வெல்ல முடியாது:டிஆர்எஸ் கவிதா விளாசல்

கோஷமிடுதல், போராட்டங்கள் நடத்துதல், ஆர்ப்பாட்டங்கள், பொது இடங்களில் ஆடிப்பாடுதல்போன்றவையும் தடை செய்யப்படுகிறதுபள்ளிகள், கல்லூரிகள், உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்களில் பொது நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகளுக்காக கூடுவதும் தடை செய்யப்படுகிறது. 

தீப்பற்றும் ஆயுதங்கள், கத்தி, உளி்ட்ட பயங்கரஆயுதங்களுக்கு அனுமதியில்லை. 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
இண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி ரீஃபண்ட்! உன்னிப்பாக கண்காணிக்கும் மத்திய அரசு!