குஜராத் தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம் முடிந்தபின் டெல்லியில் தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தலைவர்களை அழைத்து மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
குஜராத் தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம் முடிந்தபின் டெல்லியில் தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தலைவர்களை அழைத்து மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் டெல்லியில் பாஜக அலுவலகத்தில் நடக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக்கூட்டத்தில் பங்கேற்க தேசியஅளவிலான நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள், தேசியபொதுச்செயலாளர்கள், மாநில பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மாநிலப்பொறுப்பாளர்கள் என அனைவரையும் பங்கேற்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜே.பிநட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
50 கி.மீ பேரணி!16 தொகுதிகள்: மெகாபேரணியில் பிரதமர் மோடி பிரச்சாரம்:10 லட்சம் பேர் திரண்டனர்
இந்த கூட்டத்தின் முடிவில் பாஜகவில் அமைப்பு ரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் வரலாம். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பலர் கட்சிப்பொறுப்புக்குள் வரலாம், நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சமூக ஊகடப்பிரச்சாரம், மக்களவைத் தேரத்லில் பூத் நிர்வாகம், மேலாண்மை, சமூக ஊடக ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
2 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தில் நிர்வாகரீதியான ஆலோசனைகள், தேர்தலுக்கு தயாராவது ஆகியவை குறித்து பேசப்பட உள்ளதாகத் தெரிகிறது.
குஜராத் தேர்தல்: ரூ.750 கோடிக்கு நகைகள், பணம் பறிமுதல்:தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
இது தவிர பாஜக தேசியத் தலைவராக இருக்கும் ஜேபி நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இப்போதைக்கு தேர்தல் நடத்தாமல் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தபின் தலைவர் தேர்தலை நடத்தலாம் என முடிவெடுக்கப்படலாம். இதனால் கூடுதலாகஓர் ஆண்டு ஜேபி நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம்.
டிசம்பர் 5ம் தேதி மதிய உணவுக்குக்குப்பின் பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. 6-ம் தேதி மாலை 4 மணியுடன் கூட்டம் முடியும். இதற்கிடையே கட்சியின் பொதுச்செயாளர்கள் மட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது, இந்தக் கூட்டம் டிசம்பர் 6ம்தேதி மாலையில் தொடங்கி இரவுவரை நடக்கும் எனத் தெரிகிறது