குஜராத்தில் 2-வது கட்டத் தேர்தலுக்காக பிரதமர் மோடி 50 கி.மீ தொலைவுக்கு பேரணி நடத்தி மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் வேறு எந்தத் தலைவரும் இதுபோன்று 50கி.மீ தொலைவுக்கு பேரணி நடத்தியதில்லை.
குஜராத்தில் 2-வது கட்டத் தேர்தலுக்காக பிரதமர் மோடி 50 கி.மீ தொலைவுக்கு பேரணி நடத்தி மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் வேறு எந்தத் தலைவரும் இதுபோன்று 50கி.மீ தொலைவுக்கு பேரணி நடத்தியதில்லை.
குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2வது கட்டத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிகிறது.
குஜராத் தேர்தல்: ரூ.750 கோடிக்கு நகைகள், பணம் பறிமுதல்:தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று மிகப்பெரிய அளவில் 50 கி.மீ தொலைவுக்கு பேரணி நடத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடி நேற்று மாலை நரோடா காம் பகுதியில் இருந்து தனது பேரணியைத் தொடங்கி, 50 கிமீ தொலைவுக்கு பேரணி நடத்தி, தெற்கு காந்தி நகரில் தனது பேரணியை முடித்தார்.
ஏறக்குறைய 16 தொகுதிகளை உள்ளடக்கி இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். குறிப்பாக தக்கர்பாபனகர், பாபுநகர், நிகோல், அமரிவாடி, மணிநகர், தணிலிம்டா, ஜமல்புர்காடியா, எலிஸ்பிரிட்ஜ், வெஜால்புல், காட்லோடியா, நரன்பூர், சபர்மதி ஆகியதொகுகிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 4 மணிநேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு… 60.20% வாக்குகள் பதிவு!!
இந்த தேர்தலில் பாஜகவின் மிகப்பெரிய பேரணியாக இது அமையும் என்று தெரிகிறது. இந்தியாவில் வேறுஎந்தத் தலைவரும் 50கி.மீ தொலைவுக்கு பேரணி நடத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ததில்லை, முதல்முறையாக பிரதமர் மோடிதான் பிரச்சாரம் செய்துள்ளார்.
அகமதாபாத்தில் 13 தொகுதிகளும், காந்திநகரில் ஒரு தொகுதியும் இதில் அடங்கும். பிரதமர் மோடியின் பிரச்சாரத்தைக் காண ஏறக்குறைய 10 லட்சம் தொண்டர்கள் திரண்டனர் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தொண்டர்களையும், மக்களையும் பார்த்த பிரதமர் திறந்த வாகனத்தில் நின்று கையசைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நரோடா பாட்டியா கலவரத்தில் குற்றவாளியான மனோஜ் குல்கர்னியின் மகள் பயால் குல்கர்னிக்கு நரோடோ தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. நரோடா பாட்டியா கலவரத்தில்தான் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். தற்போது மனோஜ் குல்கரின் வாழ்நாள் சிறை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து தற்போது பிணையில் வந்துள்ளார்.
பாஜகவின் வெற்றிவாய்ப்புத்தொகுதிகள் 2002ம் ஆண்டில் இருந்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. 140 தொகுதிகளை இலக்கு வைத்தாலும், கடந்த 2018ம் ஆண்டில் 99 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 77 இடங்களை வென்றது.