தென் கொரிய யுடியூபரிடம் சில்மிஷம்… 2 இளைஞர்களை கைது செய்தது மும்பை போலீஸ்!!

Published : Dec 02, 2022, 12:24 AM IST
தென் கொரிய யுடியூபரிடம் சில்மிஷம்… 2 இளைஞர்களை கைது செய்தது மும்பை போலீஸ்!!

சுருக்கம்

மும்பையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த தென் கொரிய யுடியூபரிடம் தவறாக நடந்துக்கொண்ட இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மும்பையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த தென் கொரிய யுடியூபரிடம் தவறாக நடந்துக்கொண்ட இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென் கொரியாவை சேர்ந்த பிரபல யுடியூபர் மையோசி இன். இவர் மும்பை கார் என்ற பகுதியில் யூடியூபில் லைவ் செய்துக்கொண்டிந்தார்.

இதையும் படிங்க: அடப்பாவி! ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை போட்டு தள்ளிய கணவர்.. விபத்து போல் நாடகமாடியது அம்பலம்.!

அப்போது அவரை இடைமறிந்த இளைஞர் ஒருவர், மையோசியின் கையை பிடித்து இழுத்து அவருக்கு முத்தமிட முயற்சித்தார். அவரிடம் இருந்து போராடி தப்பித்த மையோசி, நடந்து செல்லும் போது, மற்றொரு இளைஞர் அவரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏறும்படியும் வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும் வற்புறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இருதர்ப்பினரை இடையே அடிதடி… ஒரு தரப்புக்கு கத்தி குத்து.. சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!

அதனை மறுத்த மையோசி அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார். இந்த சம்பவங்கள் அனைத்தும் லைவில் ஒளிபரப்பானது. இந்த வீடியோ மும்பை போலீசாரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து மையோசியிடம் தவறாக நடந்துக்கொண்ட 2 இளைஞர்களையும் கைது செய்த மும்பை போலீஸார், அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை