Gujarat Assembly election:குஜராத் தேர்தலில் வெளிப்படைத்தன்மை!13,065 வாக்குசாவடிகளில் வெப்காஸ்டிங் கண்காணிப்பு

By Pothy Raj  |  First Published Dec 1, 2022, 4:33 PM IST

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்த, 13 ஆயிரத்து 65 வாக்குப்பதிவு மையங்களில் நேரடிக் காண்காணிப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்த, 13 ஆயிரத்து 65 வாக்குப்பதிவு மையங்களில் நேரடிக் காண்காணிப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் 2கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று முதல்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 

Tap to resize

Latest Videos

குஜராத் தேர்தல்: நண்பகல் ஒரு மணிவரை 35 சதவீதம் வாக்குப்பதிவு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

இதனிடையே தேர்தல் வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கவும், 13,065 வாக்குப்பதிவு மையங்களில் நேரடி கண்காணிப்பு முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.

குஜராத் தேர்தல் அதிகாரி பி பாரதி கூறுகையில் “ காலை 6.30 மணிமுதல் தொடர்ந்து தேர்தல் பணிகளை லைவ் வெப்காஸ்டிங் மூலம் கண்காணித்து வருகிறோம். மாநிலத்தில் உள்ள 50 சதவீத வாக்குப்பதிவு மையங்கள், தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக, 25,430 வாக்குப்பதிவு மையங்கள்உருவாக்கப்பட்டு, அதில் 13,065 வாக்குப்பதிவு மையங்கள் நேரடிக்கண்காணிப்பில் உள்ளன.

இந்த 13,065 வாக்குமையங்களையும், மாநில அளவிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பிருந்தே 42 அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில்உள்ளனர்” எனத் தெரிவித்தார்

ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தில் ‘மொபைல் நூலகம்’

இந்த தேர்தலில் குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் படேல், ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதான் காட்வி, பாஜக வேட்பாளர் ஹர்திக் படேல், பாஜக வேட்பாளர் அல்பேஷ் தாக்கூர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.


 

click me!