குஜராத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில், நண்பகல் ஒருமணிவரை 34.48% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில், நண்பகல் ஒருமணிவரை 34.48% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக இன்று 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சிபிஐ, அமலாக்கப்பிரிவு மூலம் தேர்தலில் மோடியால் வெல்ல முடியாது:டிஆர்எஸ் கவிதா விளாசல்
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றி வருகிறார்கள். காலை 11 மணி நிலவரப்படி 19.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது
ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தில் ‘மொபைல் நூலகம்’
வால்சத் மாவட்டத்தில், உம்பர்கான் தொகுதியைச் சேர்ந்த 100வயதான காமுபென் படேல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த புகைப்படத்தை தேர்தல் ஆணையம் ட்விட்டரில் பெருமையுடன் பதிவிட்டிருந்தது.
அம்ரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பரேஷ் தானனி, ராஜ்கோட் தெற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் தினேஷ் ஜோஷி ஆகியோர் தங்கள் சைக்கிளின் பின்பகுதியில் கேஸ் சிலிண்டரைக் கட்டிக்கொண்டு, வாக்குப்பதிவு மையம் நோக்கி வந்து, பணவீக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர் விஜய் ரூபாய், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல், மாநிலங்கவை எம்.பி. பரிமல் நாத்வானி, ஜாம்நகர் பாஜக வேட்பாளரும், கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தானனணி, ஆம்ஆத்மி கட்சி மாநில தலைவர் கோபால் இடாலியா ஆகியோர் வாக்களித்தனர்.
இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி
ராஜ்கோட் வாக்குப்பதிவு மையத்தில் ரிவாபா ஜடேஜா வாக்களித்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா, ஜாம்நகரில் தனது வாக்கைச் செலுத்தினார்.
காலை 11 மணிவரை தப்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 26.47% வாக்குகளும், தாங் மாவட்டத்தில் 24.99% வாக்குகளும் பதிவாகின. துவரகா மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 15.86% வாக்குகளும் பதிவாகின. சூரத் நகரில் 17.92%, அம்ரேலியில் 19% வாக்குகளும் பதிவாகின எனதேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.