Telangana transgender doctors: வரலாறு படைத்த திருநங்கைகள் ! தெலங்கானா அரசு மருத்துமனையில் மருத்துவராகப் பணி

By Pothy RajFirst Published Dec 1, 2022, 1:32 PM IST
Highlights

தெலங்கானா மாநிலத்தில் இரு திருநங்கைகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், தங்களின் மருத்துவப் படிப்பை முடித்து அரசு மருத்துவமனையில் இன்று பணியில் சேர்ந்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் இரு திருநங்கைகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், தங்களின் மருத்துவப் படிப்பை முடித்து அரசு மருத்துவமனையில் இன்று பணியில் சேர்ந்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் மருத்துவப்பணியி்ல் சேர்ந்த முதல் திருநங்ககைகள் என்ற பெயரை, பிரச்சி ரத்தோட் மற்றும் ருத் ஜான் பால் ஆகிய இருவரும் பெற்று வரலாறு படைத்தனர். இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் பணியில் இணைந்தனர்.

ஜிபிஎஸ், கேமிராவுடன் கரும்பருந்துகள், நாய்களுக்கு ராணுவம் பயிற்சி: எல்லைப் பாதுகாப்புக்கு புதிய உத்தி!

ரத்தோடு கூறுகையில் “ 2015ம் ஆண்டு அடிலாபாத்தில் மருத்துவக் கல்வியைமுடித்தேன். எனது பாலினம் காரணமாகசமீபத்தில் நான் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து பணி நீக்கப்பட்டேன்.

சிறுவயதிலிருந்து திருநங்கை என்பதால், பல்வேறு பாகுபாடுகள், சமூக புறக்கணிப்புகளைச் சந்தித்தேன். ஆனால், இந்தப்பாகுபாடும், புறக்கணிப்பும் ஒருபோதும் சாதனைக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். நான் சிறுவயதிலிருந்தே மருத்துவராகும் கனவுடன் இருந்தேன். ஆனால், 11மற்றும் 12ம் வகுப்புகளில் நான் மிகுந்த தொந்தரவுக்கு ஆளாகினேன்.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கான தடை செல்லும்: கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

அதையெல்லாம் மீறி நான் மருத்துவம் படித்தேன். திருநங்கைகளுக்கு தனியாக வேலையில் இடஒதுக்கீடு, கல்வியில் இட ஒதுக்கீடு ஆகியவை இருந்தால்தான் அவர்களால் படிக்க முடியும். எங்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று சேர்க்காமல் பாலினச் சிறுபான்மையினர் என்ற பட்டியலில் வைக்க வேண்டும். 

மருத்துவம் படித்து முடித்தபின், டெல்லி சென்று உயர்கல்வி படிக்க முயன்றேன். ஆனால் அங்கு சூழல் சரியில்லை என்பதால், நான் மீண்டும் ஹைதராபாத்துக்கே திரும்பிவிட்டேன். ”எ னத் தெரிவித்தார்.

இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது பாலினத்தைக் கூறாமல் ரத்தோடு பணியாற்றினார். ரத்தோடு பாலினம் தெரிந்தவுடன் மருத்துவமனை நிர்வாகம் அவரை பணியிலிருந்து நீக்கியது, ரத்தோடு பணியில் தொடர்ந்தால் நோயாளிகள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று வேலையிலிருந்து நீக்கியது. இதைத் தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனம் தனியார் கிளினிக் அமைக்க உதவியது, தற்போது அரசு மருத்துவமனையில் பணியில் இணைந்துள்ளார்

click me!