Bharat Jodo Yatra : ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தில் ‘மொபைல் நூலகம்’

By Pothy Raj  |  First Published Dec 1, 2022, 12:40 PM IST

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் மொபைல் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல், வரலாறு, இந்தியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் அடங்கிய நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன.


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் மொபைல் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல், வரலாறு, இந்தியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் அடங்கிய நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன.

இந்த மொபைல் நூலகத்தில் ஏறக்குறைய ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் காங்கிரஸ் தொண்டர்கள், ஓய்வு நேரத்தில் இந்த புத்தகத்தை எடுத்து படிக்க வசதியாக மொபைல் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி யாத்திரை சென்று வரும்நிலையில் இந்த மொபைல் நூலகத்தை முறைப்படி திறந்து வைக்க உள்ளார்.  

இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி

இந்த நூலகம் குறித்து அனைத்து இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய சட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் அவானி பன்சால் கூறுகையில் “ இந்த நகரும் நூலகத்தில் 1,000 நூல்கள் உள்ளன. அரசியல், வரலாறு, உலக அரசியல், இந்திய அரசியல், இந்தியத் தலைவர்கள் குறி்த்த அடங்கிய புத்தகங்கள், இந்திரா காந்தி, நேரு குறித்த புகைப்படங்கள், ஏராளமான தலைப்புகளில் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தியுடன் நடைபயணம் செல்பவர்கள், ஓய்வு நேரத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக மொபைல் நூலகம் உருவாக்கப்பட்டது. இந்தியா என்ற எண்ணத்தை மக்களின் வாழ்வில் நிரந்தரமாக மாற்றும் நோக்கில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் நூலகத்தை ராகுல் காந்தி முறைப்படி திறந்து வைப்பார்.இதேபோன்று 500 மொபைல் நூலகங்களை காங்கிரஸ்கட்சி நாடுமுழுவதும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கான தடை செல்லும்: கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

இந்த மொபைல் நூலகத்துக்குள் இரு இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் படிக்க நினைப்பவர்கள் அங்கேயேஅமர்ந்து படிக்க முடியும். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு முக்கியமான இடம் நூலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பழக்கவழக்கங்களின் விளைவாகவே ஒருவரின் வெற்றியும், தோல்வியும் வருகிறது என்று நூலகத்தில் மிகப்பெரிய வாசகம் எழுதப்பட்டுள்ளது. நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் வரும் 17 காங்கிரஸ் தொண்டர்கல் நகரும் நூலகம் தேவை என்று வலியுறுத்தியதையடுத்து, இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அறிந்துக்கொள்ளக்கூடிய வகையில் அனைத்து அரிசயல் தலைவர்கள் குறித்த புத்தகங்களும் உள்ளன.

ஜிபிஎஸ், கேமிராவுடன் கரும்பருந்துகள், நாய்களுக்கு ராணுவம் பயிற்சி: எல்லைப் பாதுகாப்புக்கு புதிய உத்தி!

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியால் நாட்டின் வரலாறு மாற்றப்பட்டு வருகிறது, மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. இந்த நேரத்தில் மக்களிடையே பல்வேறு செய்திகளை பரப்பும் வகையில் புத்தகங்கள் அவசியம், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் புத்தகங்கள் சென்று சேர்வது அவசியம். மாநிலத்தின் தலைநகர்களில் நூலகம் அமைக்கவும் காங்கிரஸ்கட்சி திட்டமிட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்

click me!