G-20 Presidency : இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி

By Pothy RajFirst Published Dec 1, 2022, 11:05 AM IST
Highlights

ஜி-20 நாடுகல் தலைமைப் பொறு்பபை இந்தியா முறைப்படி (டிசம்பர்-1)இன்று ஏற்கிறது. இந்தியா முன், பொருளாதார மந்தநிலை, பல்வேறுநாடுகளின்கடன், உக்ரைன் ரஷ்யா பிரச்சினை, காலநிலை மாறுபாடு உள்ளிட்ட சர்வதேச  அளவிலான சவால்களை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது

ஜி-20 நாடுகல் தலைமைப் பொறு்பபை இந்தியா முறைப்படி (டிசம்பர்-1)இன்று ஏற்கிறது. இந்தியா முன், பொருளாதார மந்தநிலை, பல்வேறுநாடுகளின்கடன், உக்ரைன் ரஷ்யா பிரச்சினை, காலநிலை மாறுபாடு உள்ளிட்ட சர்வதேச  அளவிலான சவால்களை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது

ஜி20 நாடுகள் தலைவராக இருந்த இந்தோனேசியாவிடம் இருந்து தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் டிசம்பர் 1ம்தேதி முதல் முறைப்படி மாறுகிறது. கடந்த மாதம் இந்தோனேசினியாவின் பாலி நகரில் நடந்த ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியிடம் ஜி-20 தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டாலும், அதன் அதிகாரபூர்வ மாற்றம் இன்று முதல் தொடங்குகிறது.

ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று ஏற்கும் நிலையில் பிரதமர் மோடி ட்வி்ட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ஜி20 தலைமைப் பொறுப்பை இன்றுமுதல் இந்தியா ஏற்கிறது. உலக நலனுக்காக அனைவரையும் உள்ளடக்கி, இலக்கு வைத்து, திட்டமிட்டு செயலாற்று வகையில், வரும் ஆண்டில் நாம் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சில கருத்துக்கள் இருக்கிறது. 

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஜி20 தலைமைப் பொறுப்பை இதற்கு முன் ஏற்ற நாடுகளின் தலைவர்கள், குறிப்பிடத்தக்க முடிவுகளை வழங்கினார்கள் என்று ஒப்புக்கொள்கிறேன். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் வகையில், மாற்றத்தை ஊக்குவிக்கும் அடிப்படை மனப்பான்மைக்கு மாற வேண்டும், நாம் இன்னும் உயர்வதற்கு இதுவே சிறந்த நேரம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்

மக்களுக்கு நிலையான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல், உணவு, உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் உலகளாவிய விநியோகத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துவதை இந்தியா விரும்புகிறது.

நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களான பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், தொற்றுநோய் போன்றவற்றைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும், இந்தியாவின் ஜி-20 தலைமைப் பதவியானது, 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளால் ஈர்க்கப்பட்டு, ஒற்றுமையை மேலும் மேம்படுத்தும் வகையில் செயல்படும்.

ஜி20 மாநாட்டில் முக்கியத்துவம் பெற்ற சதுப்பு நிலக்காடு எவ்வாறு இயற்கை அழிவுகளை பாதுகாக்கிறது?

உலகளாவிய சவால்களை தீர்க்க ஒற்றுமை, சேர்ந்து உழைத்தல் ஆகியவற்றை நமது ஆன்மீக மரபுகளில் இருந்து ஊக்கத்தைப் பெற வேண்டும்.  பற்றாக்குறை மற்றும் மோதல் இரண்டிற்கும் வழிவகுத்த அதே பழைய பூஜ்ஜியத் தொகை மனநிலையில் சிக்கிக் கொள்ளும் நேரம் போய்விட்டது.

காலநிலை மாற்றம், தீவிரவாதம்மற்றும் தொற்றுநோய்கள் போன்றவை நாம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இந்த சவால்களைத் தீர்க்க முடியும், ஒருவருக்கொருவர் சண்டையிடுவதன் மூலம் அல்ல. ஆனால் அதிர்ஷ்டவசமாக, இன்றைய தொழில்நுட்பம் மனிதகுல அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளையும் வழங்குகிறது. 

: ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா! இந்தியா முன் இருக்கும் வாய்ப்புகளும், சவால்களும் என்ன?

பலவித மொழிகள், மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையுடன் விளங்கும் இந்தியா, உலகின் ஒரு பன்முக சமூகம் வாழும் இடம். 
ஜனநாயகத்தின் மரபணுவுக்கு கூட்டு முடிவெடுக்கும் பழமையான மரபுகளை, இந்தியா பங்களிப்பு செய்கிறது. ஜனநாயகத்தின் தாயாக இருக்கும் இந்தியாவின்  ஒருமித்த கருத்து கட்டளைகளால் அமைந்தது அல்ல, லட்சக்கணக்கான குரல்கள் இணக்கமாக கலந்து ஒலிப்பதால் உருவாகிறது

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
 

click me!