World AIDS Day: இன்று உலக எய்ட்ஸ் தினம் ! வரலாறு, முக்கியத்துவம் என்ன?

By Pothy RajFirst Published Dec 1, 2022, 11:56 AM IST
Highlights

ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதியான இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஹெச்வி வைரஸுக்கு எதிராக போராடவும், ஹெச்ஐவி வைரஸுன் வாழ்ந்துவரும் மக்களுக்கும், ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இது ஒருவாய்ப்பாகும். 

ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதியான இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஹெச்வி வைரஸுக்கு எதிராக போராடவும், ஹெச்ஐவி வைரஸுன் வாழ்ந்துவரும் மக்களுக்கும், ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இது ஒருவாய்ப்பாகும். 

உலகளவில் ஹெச்வி நோய் தீவிரமான உடல்பாதிப்புகளை கொடுக்கும் நோயாகப் பார்கப்படுகிறது, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உலகளவில் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உலகளவில் ஹெச்ஐவி நோய்க்கு பலியாகிறார்கள். 

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரிவினை, சமத்துவமின்மை, மனித உரிமைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல குறைபாடுகள் காரணமாக எச்.ஐ.வி உலகளாவிய சுகாதார தொற்றுநோயாக மாறி இன்று தொடர்ந்து வருகிறது

2022, உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கியம்

எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் போராட்டத்துக்கு தடையாக இருக்கும் அனைத்து அநீதிகளையும் நீக்க வேண்டும் என்று ஐநா கேட்டுக்கொள்கிறது. 2022ம் ஆண்டின் கருப்பொருளாக “சமன்செய்தல்” முன்வைக்கப்படுகிறது. இதன்படி, ஏற்றத்தாழ்வுகளை நீ்க்கி, எய்ட்ஸ் ஒழிப்பில் உதவுவதற்கும் தேவையான முயற்சிகளை செய்து, நாம் அனைவரும் செயல்படுவதற்கான அழைப்பு.

இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்கள் என அமெரிக்காவை சீனா எச்சரித்தது:பென்டகன் அறிக்கை

பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவசேவையை உறுதிசெய்து, எச்.ஐ.வி சிகிச்சை, பரிசோதனை மற்றும் தடுப்புக்கான சேவைகளின் கிடைக்கும் தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். 
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள், அவர்கள் பற்றி முன்முடிவோடு இருப்பவர்களுக்கு எதிராகப் போராட வேண்டும். அனைவரும் மதிக்கப்பட வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வரலாறு

கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி உலக சுகாதார அமைப்பு, உலக எய்ட்ஸ் தினத்தை உருவாக்கியது. எய்ட்ஸ், ஹெச்ஐவி குறித்த தகவல்கள், விழிப்புணர்வுகளை, உள்ளூர் மக்கள், அரசுகள், சர்வதேச அமைப்புகள், தனியார் அமைப்புகள், மக்களுக்கு தெரிவிக்க இந்த தினம் உருவாக்கப்பட்டது. 1988ம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினம் உருவாக்கப்பட்டபோது, 90ஆயிரம் முதல் 1.50லட்சம் பேர் மட்டுமே ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

அடுத்த 20 ஆண்டுகளில் உலகளவில் 3.30 கோடி மக்கள் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டனர். கடந்த 1981ம்ஆண்டு ஹெச்ஐவி வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 2.50 கோடி மக்கள் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவாக எய்ட்ஸ் விழிப்புணர்வு, பிரச்சாரங்கள் செய்ய டிசம்பர் 1ம் தேதி எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது

1996ம் ஆண்டுவரை உலக சுகாதார அமைப்பு உலக எய்ட்ஸ் தினத்துக்கு ஆண்டுதோறும் கருத்துரு, நிகழ்ச்சிகளை நடத்தியது. அதன்பின், ஐநாஎய்ட்ஸ் அமைப்பு, பணிகளைக் கவனிக்கத் தொடங்கியது. எய்ட்ஸ் விழிப்புணர்வு, தகவல்களை உலகளவில் கொண்டு சென்றது. உலக எய்ட்ஸ் பிரச்சார அலுவலகத்தை கேப்டவுன், நமிபியா, ஆம்டர்டாம், உள்ளிட்ட நாடுகளில் அமைத்து. 

ஜாம்பி வைரஸ்' உயிர்த்தெழுந்தது! மனிதர்களுக்கு பாதிப்பா?48,500 ஆண்டுகளுக்கு முன் புதைந்தது

முக்கியத்துவம்

உலகளவில் தற்போது 3.80 கோடி மக்கள் ஹெச்ஐவி வைரஸை உடலில் சுமந்து வாழ்ந்து வருகிறார்கள். வரலாற்றில் மிகவும் அழிவுக்குரிய வைரஸ்களில் ஹெச்வியும் ஒன்று, கடந்த 1984ம் ஆண்டு ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதுவரை அதை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை. 3.50 கோடி மக்கள் ஹெச்ஐவி வைரஸூக்கு உயிரிழந்துள்ளனர்.

இன்று , ஹெச்ஐவி நோய்க்கு நவீன அறிவியல் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. தன்னையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய உண்மைகளை அறியாததால், நோயுடன் வாழும் பலர் இன்னும் களங்கத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறார்கள்.

உலக எய்ட்ஸ் தினம் முக்கியத்துவம் வாய்ந்தது உலகளவில் தீவிர சிக்கலாகவே இருந்துவருகிறது என்பதை ஆண்டுதோறும் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நினைவூட்டவே இந்தநாள் அனுசரிக்கப்படுகிறது.  இதை எதிர்கொள்ள தேவையான அவசர நிதி, அதிக விழிப்புணர்வு, தவறாண எண்ணங்களை ஒழித்தல் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் தேவை.
 

click me!