டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் என்னையும், என் கட்சியினர் சிலரையும் அமலாக்கப்பிரிவு விசாரி்க்க இருப்பதாக தகவல் வெளியானது, எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று தெலங்கானா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவான கே.கவிதா தெரிவித்தார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் என்னையும், என் கட்சியினர் சிலரையும் அமலாக்கப்பிரிவு விசாரி்க்க இருப்பதாக தகவல் வெளியானது, எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று தெலங்கானா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவான கே.கவிதா தெரிவித்தார்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கான தடை செல்லும்: கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமித் அரோரா தொடர்பான அமலாக்கப்பிரிவின் ரிமாண்ட் அறிக்கையில், டிஆர்எஸ் எம்எல்ஏ கவிதா பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து எம்எல்ஏ கவிதா, ஹைதராபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் என் பெயரும், எங்கள் கட்சியினர் சிலர் பெயரும் இடம் பெற்றுள்ளது. நாங்கள் எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அமலாக்கப்பிரிவு, சிபிஐ எங்களிடம் கேள்வி கேட்டால், விசாரித்தலால் உறுதியாக பதில் அளிப்போம். ஆனால், தலைவர்களின் நேர்மையை சிதைக்கும் வகையில் ஊடகங்களில் தவறான செய்தி வெளியிடும் மத்திய அரசுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.
பாஜக இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாநிலஅ ரசுகளை கவிழ்த்து, பின்பக்க கதவுகள் வழியாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. என்னையும், எங்கள் கட்சி நிர்வாகிகளையும் பிரதமர் மோடி முடிந்தால் சிறையில் அடைக்கட்டும்.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தில் ‘மொபைல் நூலகம்’
ஆனால், இதுபோன்ற மனநிலையை பிரதமர் மோடி மாற்றிக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அமலாக்கப்பிரிவு, சிபிஐ விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி தேர்தலில் வெல்வது மோடியால் சாத்தியமில்லை. தெலங்கானா மக்கள் மிகவும் புத்திசாலிகள் அவர்களிடம் வெற்றி பெறுவது கடினம்
எங்களை சிறையில் தள்ளுவோம் என்று நீங்கள் கூறினால் என்ன நடக்கும். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டோம். எங்களை தூக்கிலிடுவீர்களா, இப்போது அனைவரையும் சிறையில்தானே வைத்துள்ளீர்கள்.
இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி
தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் அமலாக்கப்பிரிவு, சிபிஐ அமைப்புகளை மத்திய அரசு அனுப்புவது வழக்கமானது. மக்களின் நலுக்காகவே டிஆர்எஸ் நிர்வாகிகள் செயல்படுகிறார்கள், வேறு ஏதும் செய்யவில்லை”எ னத் தெரிவித்தார்