மரத்தில் கார் மோதி விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

Published : Jul 31, 2019, 06:51 PM IST
மரத்தில் கார் மோதி விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

சுருக்கம்

புனேவில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

புனேவில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலம் தாரிவாட் பகுதியில் இருந்து மும்பை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்தனர். கார் புனே-பெங்களூரு தேசிய நெடுச்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியது.  

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரின் ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 7 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், கார் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!