சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் பலவந்தபோதிலும், அவரை நேதாஜியாகவே அவரின் ஆதரவாளர்கள் பார்த்தனர்.
சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் பலவந்தபோதிலும், அவரை நேதாஜியாகவே அவரின் ஆதரவாளர்கள் பார்த்தனர்.
இந்திய அரசியலின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான உ.பி.யின் முன்னாள் முதல்வர், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவர்தனது 83வது பிறந்தநாளைக் கொண்டாட இன்னும் 6 வாரங்களே இருக்கும் நிலையில் இந்த உலகைவிட்டு மறைந்தார்
சோசலிஸ்ட் தலைவர் ராம்மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள்வந்தவர் முலாயம் சிங் யாதவ். உ.பியில் 10முறை எம்எல்ஏகாவகும், 7முறை எம்.பியாகவும் இருந்தார். இதில் பெரும்பாலும் மெயின்புரி தொகுதியில்தான் முலாயம் சிங் யாதவ் வென்றுள்ளார்.
1996 முதல் 98 வரை தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராக முலாயம் சிங் யாதவ் இருந்தார். பிரதமர் பதவிக்கும் முலாயம் சிங் யாதவ் பெயர் அடிப்பட்டாலும் தேர்வாகவில்லை.
தேசிய அரசியலில் பலதசாப்தங்களாக இருந்தாலும், பெரும்பாலும் முலாயம் சிங்கின் அரசியல் வாழ்க்கை மாநில அரசியலில்தான் செலவானது. தனது கட்சித் தலைவராக தனது மகன் அகிலேஷ் யாதவை நியமித்தபோதிலும்கூட, கட்சித் தொண்டர்கள் நேதாஜி என்றே கடைசி வரை முலாயம் சிங் யாதவை அழைத்தனர். அவர் மீது தொண்டர்கள் வைத்திருந்த மரியாதை, அன்பு, விஸ்வாசம் குறையவே இல்லை.
பலமுறை கட்சிகளில் இருந்து மாறி, கட்சிகளை இணைத்து அரசியல் படிகட்டுகளில் முலாயம் சிங் யாதவ் ப யணித்துள்ளார். லோகியாவின் சன்யுக்த் சோசலிஸ்ட்கட்சி, சரண்சிங்கின் பாரதிய கிராந்தி தளம், பாரதிய லோக் தளம் ஆகிய கட்சிகளில் பயணித்து இறுதிகாய 1992ம் ஆண்டு சமாஜ்வாதிக் கட்சியைமுலாயம்சிங் யாதவ் தோற்றுவித்தார்
உத்தரப்பிரதேசத்தின் ‘நேதாஜி’! யார் இந்த முலாயம் சிங் யாதவ்
உ.பியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக தனது அரசியல் எதிரியாக கருதப்படும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் முலாயம் சிங் யாதவ் சமரசம் செய்து ஆட்சியைப் பிடித்தார். பாஜக, காங்கிரஸ் கட்சியுடனும்கூட்டணி வைத்து, பின்னர் முலாயம் சிங் யாதவ் பிரிந்தார்
1990களில் பாபர் மசூதி-ராம் ஜென்மபூமி விவகாரத்தில் பாஜகவுக்கும், முலாயம் சிங் யாதவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டு உபியில் ஆட்சி கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சியை சில காலம் நடத்தினார்.
1996ம் ஆண்டு தேசிய அரசியலுக்குள் முலாயம் சிங் யாதவ் நுழைந்தார். மெயின்புரி மக்களவை தொகுதியில் வென்று முலாயம் சிங் நாடாளுமன்றம் சென்றார். ஒரு கட்டத்தில் பாஜகஅல்லாத காங்கிரஸுக்கு மாற்றாக கூட்டணியை உருவாக்க முலாயம் சிங் யாதவ் முயன்று, அந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் அவர் கருதப்பட்டார்.
முலாயம் சிங் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: காங்கிரஸ் கட்சி இரங்கல்
பாதுகாப்புத்துறை அமைச்சராக முலாயம் சிங் யாதவ் இருந்தபோதுதான் ரஷ்யாவுடன் சுகோய் போர் விமானம் வாங்க ஒப்பந்தம் இறுதியானது. உத்தரப்பிரதேசத்தில் 3 முறை முதல்வராக முலாயம் சிங் இருந்தபோதிலும் பகுஜன் சமாஜ்,பாஜகவால் இருமுறை ஆட்சியை இழந்தார்.
2017ம் ஆண்டு சமாஜ்வாதிக் கட்சியின் தலைவராக தனது மகன் அகிலேஷை முலாயம் சிங் நியமித்தார். அப்போது முலாயம் சிங்கின் சகோதரர் சிவபால் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, கட்சி உடைந்துவிடும் என்று எண்ணப்பட்டபோது நேதாஜிபோல் இருந்து கட்சியை காப்பாற்றினார் என்று தொண்டர்களால் முலாயம் சிங் புகழப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தின் நேதாஜி! முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த அரசியல் பாதை
அரசியல் வாழ்க்கையில் பல சறுக்கல்கள், வெற்றிகள், தோல்விகளைச் சந்தித்தாலும் முலாயம் சிங் யாதவை உ.பி. மக்கள் நேதாஜியாகவே பார்த்தனர். அதனால்தான் அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கவிடாமல் வெற்றிமாலை சூட்டி அழகுபார்த்தனர்.