உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை சுருக்கமாகக் காணலாம்.
உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 88. அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை சுருக்கமாகக் காணலாம்.
இந்திய அரசியலில் மூத்த அரசியல் தலைவராகவும், 10 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர் முலாயம் சிங் யாதவ். சோசலிஸ்ட் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயன், ராம் மனோகர் லோகியாவின் தத்துவங்களால் வார்த்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் முலாயம் சிங். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், உயிரிழக்கும்வரை எம்.பியாகவே இருந்தவர் முலாயம் சிங் யாதவ். அவர் கடந்து வந்த அரசியல் பாதையை சுருக்கமாகப் பார்க்கலாம்.
முலாயம் சிங் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: காங்கிரஸ் கட்சி இரங்கல்
1939: உத்தரப்பிரதேசத்தின் இட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபை கிராமத்தில் முலாயம் சிங் பிறந்தார்
1967: ராம் மனோகர் லோகியாவின் சன்யுக்த் சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாகி உ.பி. சட்டப்பேரவைக்குள் முலாயம் சிங் நுழைந்தார்
1968: சவுத்ரி சரண் சிங் தொடங்கிய பாரதிய கிராந்தி தளம் கட்சியில் முலாயம் சிங் இணைந்தார். அதன்பின் சன்யுக்த் சோசலிஸ்ட் கட்சி, கிராந்தி தளத்துடன் இணைந்தபின் பாரதிய லோக் தளம் கட்சி உருவானது. எமர்ஜென் காலத்துக்குப்பின் பாரதிய லோக் தளம் கட்சி ஜனதா தளம் கட்சியுடன் இணைந்தது.
1977: உ.பியில் முதல்முறையாக முலாயம் சிங் அமைச்சராகினார்.
எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் போர் வீரர் முலாயம் சிங் : பிரதமர் மோடி புகழாஞ்சலி
1982- 1987 வரை: உ.பி. சட்டமேலவையில் எம்எல்சியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் முலாயம் சிங் இருந்தார்.
1996: மெயின்புரி மக்களவைத் தொகுதியில் முதல்முறையாக முலாயம் சிங் போட்டியிட்டார். அதன்பின் பாதுகாப்புத்துறை அமைச்சராக முலாயம் பதவி ஏற்றார்.
1998: சம்பல் தொகுதியில் போட்டியிட்டு முலாயம்சிங் மக்களவை எம்.பியாகினார்.
1980: லோக் தளம் கட்சியின் மாநிலத்தலைவராக முலாயம் சிங் பதவி ஏற்றார்.
1985-87 வரை: ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவராக முலாயம் சிங் இருந்தார்.
1989-91: உ.பி. முதல்வராக முதல்முறை முலாயம் சிங் பதவி ஏற்றார்.
உத்தரப்பிரதேசத்தின் ‘நேதாஜி’! யார் இந்த முலாயம் சிங் யாதவ்
1992: சமாஜ்வாதிக் கட்சியை முலாயம் சிங் உருவாக்கினார்
1993-95: உ.பி. முதல்வராக முலாயம் சிங் 2வது முறை பதவி ஏற்றார்
2003: உ.பி. முதல்வராக 3வது முறை
2003: முலாயம் சிங் மனைவி மாலதி தேவி மறைந்ததையடுத்து, சாதனா குப்தாவை திருமணம் செய்தார்
2004: மெயின்புரி தொகுதி எம்.பியாக முலாயம் சிங் தேர்வு
2007: உ.பி. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக முலாயம் சிங் தேர்வு
2009: மெயின்புரி எம்.பியாகினார் முலாயம் சிங்
2014: ஆசம்கார்க், மெயின்புரி தொகுதிகளில் முலாயம் சிங் வென்றார், இதில் மெயின்புரி தொகுதியில் ராஜினாமா
2019: மெயின்புரி தொகுதியில் 7-வது முறையாக எம்.பி.யாகினார் முலாயம் சிங்
2022: முலாயம் சிங் மேதாந்தா மருத்துவமனையில் மறைவு