mulayam singh yadav:முலாயம் சிங் யாதவ் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: காங்கிரஸ் இரங்கல்

By Pothy Raj  |  First Published Oct 10, 2022, 11:50 AM IST

முலாயம் சிங் யாதவ் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.


முலாயம் சிங் யாதவ் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ்  உடல்நிலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்ததையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளி்க்கப்பட்டு வந்தது. 

Tap to resize

Latest Videos

முலாயம் சிங் யாதவ் கடந்த வாரத்திலிருந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது மூப்பு, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. 

எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் போர் வீரர் முலாயம் சிங் : பிரதமர் மோடி புகழாஞ்சலி

இந்தத் தகவலை சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வரும் அவரின் மகனான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் நேதாஜி என்று அழைக்கப்படும் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ சமாஜ்வாதிக் கட்சியை நிறுவியவர், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” எனத் தெரிவித்துள்ளது. 

சோகத்தில் மூழ்கிய உ.பி; சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ட்விட்ரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ பாதுகாப்புத்துறை அமைச்சராக, உத்தரப்பிரதேச முதல்வராக,  இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத பங்களிப்பை முலாயம் சிங் யாதவ் அளித்துள்ளார். அவர் எப்போதும் நினைவில் கொள்ளக்கூடியவர். அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ ராம்மனோகர் லோகியாவின் கொள்கைப்படி வாழ்ந்தவர் முலாயம் சிங் யாதவ் , அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் விரும்பக்கூடியவர். உத்தரப்பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவ் இருந்தகாலம் மாநிலத்துக்கு பயனுள்ளதாக, முக்கியத்துவமான காலம்.

உத்தரப்பிரதேசத்தின் ‘நேதாஜி’! யார் இந்த முலாயம் சிங் யாதவ்

தேசிய அரசியலில் 2 முறை முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். தேவகவுடா, குஜ்ரால் ஆட்சியின்போது 2022ம் ஆண்டில் பாதுகாப்புத்துறை அமைச்சராக முலாயம் சிங் யாதவ் இரு்தார். அப்துல் கலாமை குடியரசு தலைவராக முன்மொழிந்தவர் முலாயம் சிங் யாதவ்” எனத் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ட்விட்ரில் பதிவிட்ட கருத்தில் “ ஐ.நா. சபையில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் முலாயம் சிங் யாதவை சந்தித்திருக்கிறேன். மக்களவையிலும் இருவரும் பலமுறை கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருக்கிறோம். அரசியலின் ஜாம்பவான் மறைந்துவிட்டார். அனைத்து இந்தியர்களுக்கும் முலாயம் சிங் யாதவ் மறைவு பேரிழப்பு. ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

click me!