உத்தரப்பிரதேசத்தில் பாஜகவும், சமாஜ்வாதிக் கட்சியும் எதிர்துருவங்களில் நின்று அரசியல் செய்தபோதிலும்கூட, பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதையையும், அன்பையும் முலாயம் சிங் யாதவ் கொண்டிருந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவும், சமாஜ்வாதிக் கட்சியும் எதிர்துருவங்களில் நின்று அரசியல் செய்தபோதிலும்கூட, பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதையையும், அன்பையும் முலாயம் சிங் யாதவ் கொண்டிருந்தார்.
குஜராத் பிரதமராக நரேந்திர மோடி இருந்த காலத்தில் இருந்தே, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் நெருங்கிய நட்புடன் இருந்தார். இருவரின் நட்பு அரசியல் கடந்து, ஆரோக்கியமானதாக இருந்தது.
உத்தரப்பிரதேசத்தின் நேதாஜி! முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த அரசியல் பாதை
இருவரும் எதிரான சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் உடைய கட்சிகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிரதமர் மோடியுடன் முலாயம் சிங் யாதவ் கொண்டிருந்த நட்பு தனித்துவமானது.
உத்தரப்பிரதேச 2017ம் ஆண்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதிக் கட்சி நின்றது, தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுன் அகிலேஷ் யாதவ் நெருக்கமாக இருந்து வருகிறார். பாஜகவுக்கு எதிரான சிந்தனையில் அகிலேஷ் இருந்ததால், காங்கிரஸுடான நெருக்கமும், நட்பும் வலுத்தது.
ஆனால், தனது மகன் அகிலேஷ் யாதவ், காங்கிரஸுடன் நெருக்கமாக இருக்கிறார், மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி, காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்பதைப் பற்றி முலாயம்சிங் யாதவ் கவலைப்படவில்லை,கருதவும் இல்லை.
முலாயம் சிங் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: காங்கிரஸ் கட்சி இரங்கல்
2019ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதிக் கட்சி எம்.பி. முலாயம் சிங் யாதவ், “ பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் மோடியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என வாழ்த்துகிறேன் ” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட பாஜக எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால், அவையில் இருந்த சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் இதை ரசிக்கவில்லை.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதிக் கட்சியும் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வார்த்தையை முலாயம் சிங் யாதவ் பேசும்போது, அவருக்கு அருகே இருந்த இருக்கையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார். பிரதமர் மோடியை முலாயம் சிங் வாழ்த்தியதைப் பார்த்தபோது, சோனியா காந்தி சற்று படபடப்புடன் காணப்பட்டார்.
என்றுமே நேதாஜிதான் ! முலாயம் சிங்கின் வெற்றி, தோல்வியை கருதாத ஆதரவாளர்கள்
மாநிலத்தில் எதிர்த்துருவங்களாக இரு கட்சிகளும் இருக்கும் நிலையில் பிரதமர் மோடிக்கு, முலாயம் சிங் யாதவ் வாழ்த்துத் தெரிவித்தது அனைவராலும் வியப்பாகப் பார்க்கப்பட்டது.