பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்த கொடூரம்! தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் கைது!

Asianet News Tamil  
Published : Dec 04, 2017, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்த கொடூரம்! தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் கைது!

சுருக்கம்

mother tortured

பெற்ற மகளையே சூடான தோசைக்கல்லில் அமர வைத்த கொடூர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் லலிதா (25). இவர் இரண்டாவது கணவர் பிரகாஷ் உடன் ஐதராபாத்தில் விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். லலிதாவுக்கு முதல் கணவர் கணேசுக்கும் பிறந்த 4 வயது பெண் குழந்தை, லலிதாவுடன் உள்ளது.

லலிதாவுக்கும் அவரின் இரண்டாவது கணவர் பிரகாசுக்கும் குழந்தையை பிடிக்காது என்று கூறப்படுகிறது. லலிதா மற்றும் பிரகாஷ் ஆகியோரால் சிறுமி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார்.

இந்த நிலையில், லலிதா சமையல் கொண்டிருந்தபோது, சூடான தோசைக்கல்லில் சிறுமியை உட்கார வைத்து சித்தரவதை செய்துள்ளார். பெற்ற மகள் என்றும் பார்க்காமல் சூடான தொசைக்கல்லில் உட்காரவைத்தார். 

இதையடுத்து, அந்த குழந்தையை, ஆதரவு மையத்துக்கு லலிதா கூட்டிச் சென்றார். அங்கு, சாலை ஓரத்தில் சிறுமி கிடந்தாக கூறியுள்ளார். ஆனால், சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தெலங்கான குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின் பேரில், லலிதா மற்றும் அவரது இரண்டாவது கணவர் பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பத்மஸ்ரீ, பாரத ரத்னா-ன்னு பேருக்கு முன்னாடி போடக்கூடாது! கறார் காட்டிய உயர் நீதிமன்றம்!
இனி பெரிய ராக்கெட்டுகளை ஈஸியா ஏவலாம்.. ஸ்ரீஹரிகோட்டாவில் ரெடியாகும் இஸ்ரோவின் 3வது ஏவுதளம்!