கேரளா.. 8 ஆண்டுகளில் 800க்கும் அதிகமான யானைகள் மரணம் - வைரஸ் தாக்குதல் தான் காரணமா?

By Ansgar R  |  First Published Jul 19, 2024, 11:19 PM IST

Kerala Elephants Death : கேரளாவில் கடந்த 8 ஆண்டுகளில், 800க்கும் அதிகமான யானைகள் இருந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


அண்மையில் அண்டை மாநிலமான கேரள அரசால் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் (பத்து வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய) இளம் யானைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. இது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கேரளாவில் யானைகளின் எண்ணிக்கை மதிப்பீடு - 2024’ என்ற தலைப்பின் கீழ், கேரளாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கை குறித்த வருடாந்திர கணக்கெடுப்பு வெளியானது. கடந்த செவ்வாய் கிழமை ஜூலை 16ம் தேதி இந்த வெளியானது. இது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பயிற்சியின் ஒரு பகுதியாகும். இம்மூன்று மாநில எல்லைகளில் அதிகரித்து வரும் மனித மற்றும் யானை இடையிலான மோதலின் சிக்கலைத் தீர்க்கும் நோக்கத்தில் செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

வேகமெடுக்கிறதா Chandipura Virus? இதுவரை 15 பேர் பலி - இந்த திடீர் நோய் பரவலுக்கு என்ன காரணம்?

தொகுதி எண்ணிக்கை முறையைப் பயன்படுத்தி, இந்த 2024ம் ஆண்டில் மாநிலத்தில் யானைகளின் எண்ணிக்கை 1,793 ஆக உள்ளது என்று கணக்கெடுப்பு மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட தோராயமாக ஏழு சதவீதம் குறைந்துள்ளது. மேலும் 2015 மற்றும் 2023க்கு இடையில் கேரளா மாநிலத்தின் காடுகள் மற்றும் யானைகள் காப்பகங்களில் 845 யானைகள் இறந்துள்ளன. அதே போல காலப்போக்கில் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

வயது மூப்பினால் இறக்கும் யானைகளின் இறப்பு விகிதம் குறைந்தாலும், இளம் யானைகள், குறிப்பாக பத்து மற்றும் அதற்கும் குறைவான வயதுடையவை யானைகள் அதிக அளவில் இருப்பதாக கூறபடுகிறது.மேலும் இதற்கு எண்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ் வைரஸ் (EEHV) தான் சுமார் 40 சதவிகித இறப்புக்கு காரணமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

EEHV என்றால் என்ன?

EEHVகள் என்பது புதிய இரட்டை இழைகள் கொண்ட டிஎன்ஏ ஹெர்பெஸ் வைரஸ்களின் ஒரு வகையாகும். இது இளம் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளில் கடுமையான ரத்தக்கசிவை ஏற்படுத்துகிறது. யானைகளுக்கு இந்த தொற்று ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் அவை மரணிப்பதாகவும்  கூறப்படுகிறது. ஆசிய யானைகள் அழிந்து வரும் நிலையில், இந்த EEHVகளில் இருந்து அவற்றை பாதுகாப்பது பெரும் பிரச்சனையாக உள்ளன. இந்த நோய் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக யானைகளுடன் இணைந்து உள்ளது என்றாலும், இளம் யானைகள் இதனால் இறப்பது அதிகரித்துள்ளது அச்சமளிக்கிறது. 

Street dog: கடித்து குதறிய தெருநாய்கள்; துடிதுடித்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

click me!