Hypertension:இந்தியாவில் ரத்த அழுத்த நோயாளிகளில் 75 பேருக்கு ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டை மீறியுள்ளது:லான்செட்

By Pothy Raj  |  First Published Nov 28, 2022, 2:27 PM IST

இந்தியாவில் உள்ள உயர்ரத்த அழுத்த நோயாளிகளில் நான்கில் ஒருபங்கினர் மட்டுமே கட்டுப்படுத்தக்கூடிய அளவில் வைத்துள்ளனர் என்று தி லான்செட் பிராந்திய மருத்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள உயர்ரத்த அழுத்த நோயாளிகளில் நான்கில் ஒருபங்கினர் மட்டுமே கட்டுப்படுத்தக்கூடிய அளவில் வைத்துள்ளனர் என்று தி லான்செட் பிராந்திய மருத்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய நோய், மராடைப்பு போன்றவை வருவதற்கு உயர் ரத்தஅழுத்தம் முக்கியக் காரணமாகும். இதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் போது, இது திடீரென ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

Tap to resize

Latest Videos

குஜராத் தேர்தல்: இதுதான் உங்கள் பாடமா? அமித் ஷாவை விளாசிய அசாசுதீன் ஒவைசி

புதுடெல்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பு மையம் மற்றும் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பொதுசுகாதார பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கடந்த 2001ம் ஆண்டிலிருந்து ரத்த அழுத்த வீதங்கள் தொடர்பாக 51 விதமான ஆய்வுகளை நடத்தி கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

குஜராத் தேர்தல்: இதுதான் உங்கள் பாடமா? அமித் ஷாவை விளாசிய அசாசுதீன் ஒவைசி

இந்த ஆய்வின் நோக்கம் என்பது, சமூகத்தில் ரத்த அழுத்த வீதம் எவ்வாறு மாறுபடுகிறது, அதன் உண்மையான போக்கு என்ன என்பது குறித்தும், சமீபகாலமாக ஏற்பட்ட மாற்றங்கள், கட்டுப்படுத்தப்பட்ட நிலை குறித்தும் ஆய்வு செய்தது

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்: அமலாக்கப் பிரிவு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

இது தொடர்பாக 21 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் 41 சதவீதம் உயர் ரத்தஅழுதத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆண்களும், பெண்களும் மோசமாக செயல்படுகிறார்கள் என்று தெரியவந்தது. 6 ஆய்வுகளில், கிராமப்புறங்களில் உள்ள ரத்த அழுத்த நோயாளிகளில் 12 சதவீதம் பேர் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் மோசமாக செயல்படுகிறார்கள் எனத் தெரியவந்தது.

2001 முதல் 2020ம் ஆண்டுவரை இந்தியாவில் உயர் ரத்த அழுதத்தை கட்டுப்படுத்தும் அளவு 17.5 சதவீதமாக இருக்கிறது, இதில் 2016 முதல் 2020ம் ஆண்டுவரை அதிகபட்சமாக 22.5 சதவீதம் வரைகட்டுப்படுத்தப்பட்டது.

குறிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில், தென்மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், மேற்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சிறப்பாகசெயல்படுகிறார்கள். இதில் ஆண்கள் மட்டும்தான் மோசமாக செயல்படுகிறார்கள். ஆண்கள் ரத்த அழுதத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு வாழ்க்கை முறையும் ஒரு முக்கியக் காரணமாகும்.

அதானி திட்டத்துக்கு எதிர்ப்பு!விழிஞ்சம் காவல் நிலையம் சூறை: 3,000 பேர் மீது வழக்கு: பதற்றம்!

இந்தியாவில் உள்ள ரத்த அழுத்தநோயாளிகளில் நான்கில் ஒரு பங்கு நோயாளிகள் மட்டுமே 2016 முதல் 2020ம் ஆண்டுவரை ரத்த அழுத்தத்தை கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர். இந்தியாவில் ரத்த அழுத்ததம் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதற்கு, வாழ்க்கைமுறை இடர்காரணிகளும், சமூகக் காரணிகளும் காரணமாகும். 

ரத்த அழுத்த நோயாளிகளில் 75 சதவீதம் பேரிடம் ரத்த அழுதத்தை கட்டுப்படுத்துவதில் அக்கறை இல்லை. நாடுமுழுவதும் 49 இடங்களில் 13.90 லட்சம் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 3.30 லட்சம் பெண்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள். 

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை கேள்வி எழுப்பிய காங்கிரஸின் வாக்குவங்கி தீவிரவாதம்: மோடி பேச்சு!!

உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு வீதத்தை மேம்படுத்த நிலையான, சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கி இந்தியா மதிப்பீடு செய்ய வேண்டும்.

இந்தியாவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணிகளில் உயர் ரத்த அழுத்தம் முக்கியக் காரணம். ரத்த அழுத்தத்தை சரியான அளவில், அல்லது கட்டுப்படுத்தி வைத்திருந்தால், இதய நோய் வருவதை குறைகக்லாம், உயிரிழப்பையும் தவிர்க்க முடியும்

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

click me!