நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் போலத்தான் இந்திய அரசியலுக்கு அதிகமான தலைவர்கள் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் போலத்தான் இந்திய அரசியலுக்கு அதிகமான தலைவர்கள் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகஇருந்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். பொதுத்தேர்தலுக்கு 10 மாதங்களேஇருக்கும் நிலையில் இந்த முடிவை திடீரென அறிவித்தார்.
நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்துவரும் தொழிலாளர் கட்சி மக்கள் மத்தியில் ஆதரவை இழந்துவருகிறது, பிரதமராக இருக்கும் ஜெசிந்தாவின் புகழும் மக்கள் மத்தியில் குறைந்துவருகிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ராஜினமா செய்வதாக திடீர் அறிவிப்பு:பின்னணி என்ன?
இதேநிலையில் தேர்தலில் போட்டியிட்டால் தொழிலாளர் கட்சி வரும் தேர்தலில் தோல்வி அடைய நேரிடும் என்று சர்வேயில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியை புதுப்பிக்கும் பொருட்டு ஜெசிந்தா தனது பிரதமர் பதவி ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் ஜெசிந்தா ஆர்டெர்னைப் புகழ்ந்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் விஜய் மெர்சன்ட் ஒருமுறை கூறுகையில் உங்கள் பணிக்காலவாழ்வின் உச்சத்தில் ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்றார்.
அவர் ஏன் போகவில்லை என்று மக்கள் கேட்பதற்கு பதிலாக ஏன் செல்கிறார் என்று கேட்கும்போதே சென்றுவிடுங்கள்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மெர்சன்ட் வார்த்தைப் போல், கொள்கையைப் பின்பற்றி விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்திய அரசியலுக்கு இவரைப் போன்ற தலைவர்கள் அதிகம்தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா, மும்பைக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
நியூசிலாந்து நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க சிறப்பாகச் செயல்பட்டது, சுகாதார நடவடிக்கைகளை சிறப்பாகக் கையாண்டது, பொருளாதாரத்தை சரியவிடாமல் திட்டங்களை வகுத்தமைக்காக சர்வதேச அளவில் ஜெசிந்தா ஆர்டெர்ன் பாராட்டுகளைப் பெற்றார்.ஆனால், உள்நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துவருகிறது என்பதை ஆய்வு மூலம் அறிந்தபின், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.