உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ. 600 கோடி தானமாக கொடுத்தது இவர்தான்!!

By Dhanalakshmi G  |  First Published Jul 21, 2022, 6:45 PM IST

மொரதாபாத் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் கோயல் தனது முழு சொத்தையும், அதாவது 600 கோடி ரூபாய் சொத்தையும் உத்தரப்பிரதேச அரசுக்கு தானமாக அளித்துள்ளார்.


மொரதாபாத் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் கோயல் தனது முழு சொத்தையும், அதாவது 600 கோடி ரூபாய் சொத்தையும் ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இந்த சொத்து அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளாக அரவிந்த் கோயல் சுயமாக சம்பாதித்தது. சொத்து முழுவதையும் தானம் செய்ய வேண்டும் என்ற முடிவை 25 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துவிட்டதாக அரவிந்த் கோயல் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

கொரோனா லாக் டவுனில் மொரதாபாத் சுற்றி இருக்கும் 50 கிராமங்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்துள்ளார். இலவச கல்வியும் ஏழைகளுக்கு அளித்து வந்துள்ளார். மேலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஏழைக்களுக்கு எந்தப் பாகுபாடும் பார்க்காமல் இலவச சிகிச்சை அளித்துள்ளார். 

சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் தீக்குளிப்பு… வைரலாகும் வீடியோ!!

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோர் இவரை கவுரவித்துள்ளனர். இவருக்கு ரேணு கோயல் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

இவரது சொத்து மதிப்பை கணக்கிட 5 நபர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

Viral Watch : ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி!

click me!