2024-தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; மத்தியில் மக்கள் அரசு தேவை: மம்தா பானர்ஜி சரவெடி

By Pothy RajFirst Published Jul 21, 2022, 4:49 PM IST
Highlights

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. புறக்கணிப்புதான் மக்ககளிடம் இருந்து கிடைக்கும். மத்தியில் மக்கள் அரசை அமைக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி காட்டமாகப் பேசினார்.

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. புறக்கணிப்புதான் மக்ககளிடம் இருந்து கிடைக்கும். மத்தியில் மக்கள் அரசை அமைக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி காட்டமாகப் பேசினார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காக உயிர்நீத்த தொண்டர்களுக்காக, தியாகிகள் நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடந்த இந்தக் கூட்டத்தில் மக்கள் மத்தியில்  முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: 

சோனியா காந்தி அமலாக்கத் துறையிடம் வைத்த கோரிக்கை என்ன? 2 மணிநேர விசாரணை முடிந்தது

பாஜகவினர் மூளையை இழந்துவிட்டார்கள். மே.வங்க மக்கள் மட்டுமல்லாது சாமானிய மக்களின் உணவான அரிசிபொரிக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளார்கள். பொரிக்கு மட்டுமல்ல, இனிப்புகள்(மிஸ்தி), லஸி, தயிர் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளார். உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்ந்தால்கூட ஜிஎஸ்டி வரி விதிக்கிறார்கள்.

president election result date: குடியரசுத் தலைவர் தேர்தல்: எம்.பி.க்கள் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்குவது சரியல்ல. மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டமே, தங்களின் தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கத்தான்.

மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்துள்ளது. மும்பையை உடைத்துவிட்டதாக பாஜக எண்ணுகிறது. அடுத்ததாக மே.வங்கம், சத்தீஸ்கரை உடைக்கப் போகிறார்களாம். நான் பாஜகவுக்கு எச்சரிக்கிறேன். மே.வங்கத்துக்கு வராதீர்கள். இங்கு மிகப்பெரிய விஸ்வாசமான வங்கப்புலிகள் உள்ளன

மாநிலங்களுக்கு போதுமான நிதியைத் தராமல் மத்திய அரசே வைத்துக் கொள்கிறது. எங்களுக்கு வர வேண்டிய தொகையை பாஜக தராவிட்டால், டெல்லிக்கு வந்து முகாமிடுவோம். அமலாக்கப்பிரிவு, சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எங்களை அச்சுறுத்த மத்திய அரசு முயற்சிக்க வேண்டாம். நாங்கள் கோழைகள் அல்ல, போராடி வெற்றி பெறுவோம்.

chidambaram: இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம்

2024ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. அந்தத் தேர்தலில் பாஜகவை மக்கள் வீட்டுக்குஅனுப்பும் தேர்தலாக இருக்கும். மத்தியில் மக்கள் சார்பான அரசைக் கொண்டு வர வேண்டும்

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவி்த்தார்

click me!