இந்திய குடியரசு தலைவருக்கு சம்பளம் எவ்வளவு .? அவருக்கு உள்ள சலுகைகள், அதிகாரங்கள் என்ன தெரியுமா.?

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2022, 4:29 PM IST
Highlights

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு வெற்றி விளிம்பில் உள்ளார். அவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகிறார், நாடு முழுவதும்  மாநில கட்சிகளின் ஆதரவு பெரும்பாலும் அவருக்கு இருந்ததால் அவர் முன்னிலை பெற்றுள்ளார்.

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி இந்தியாவின் ஜனாதிபதி இருக்கையை அலங்கரிக்க உள்ளார். இந்நிலையில் இந்திய குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் எவ்வளவு அவருக்கு உள்ள சலுகைகள், அதிகாரங்கள் என்னென்ன என்பது போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்: 2024-தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; மத்தியில் மக்கள் அரசு தேவை: மம்தா பானர்ஜி சரவெடி

எங்களில் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும்  சம்பள விவரங்கள் பின்வருமாறு:- இந்திய நாட்டின் குடியரசு தலைவரின் மாதச் சம்பளம் 5 லட்சம் ரூபாய் ஆகும். வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், தங்குமிடம் போன்றவை வழங்கப்படும், அவரும் அவரது மனைவியும் அல்லது (கணவன்) உலகில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்யலாம். அவருக்கு உதவியாக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பர், இதுமட்டுமின்றி சுமார் 200 பேர் அவர் தங்கும் ராஷ்டிரபதி பவனில் பணியாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் அவருக்கு உதவியாக இருப்பர்.

இதையும் படியுங்கள்: அமலாக்கத்துறை விசாரணையில் சோனியா காந்தி; வெளியே கையில் நெபுலைசருடன் பிரியங்கா!!

மேலும் குடியரசுத்தலைவர் விடுமுறை நாட்களில் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் மற்றும் சிம்லாவில் உள்ள ரிட்ரீட் மாளிகைக்குச் சென்று வரலாம். அவர் நாட்டில் குடும்பத்துடன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அதேபோல் அவர் பயணம் செய்ய mersedej Benz s600 (w221) ரக வாகனம் அவருக்கு வழங்கப்படுகிறது, நாட்டில் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதிக்கு போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் உள்ளது. அதேபோல அனைத்து  மசோதாக்களும் ஜனாதிபதியின் கையொப்பம் பெற்ற பின்னரே சட்டம் ஆக்கப்படும். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் அவரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். 2 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட 340 அறைகள் கொண்டது ராஷ்டிரபதி பவன்.

மேலும் அவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் கடமைகள் என எதற்கும் நீதிமன்றம் அவரை நிர்பந்திக்க முடியாது. சட்டப்பிரிவு 61-ன்படி இரு அவைகளிலும் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றமும், தீர்ப்பாயமோ அவரை விசாரிக்க, உத்தரவு போட முடியும். அவரது பதவிக் காலத்தின் போது எந்த ஒரு நீதிமன்றத்திலும் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு  தொடர முடியாது, அவர் பதவியில் இருக்கும் வரை எந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் அவரை கைது செய்யவோ சிறைப்படுத்தவோ முடியாது என பல உச்ச அதிகாரம் கொண்ட பகுதியாகவே குடியரசுத் தலைவர் பதவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!