ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் அவரின் சொந்த ஊரில் கொண்டாட்டம் கலைக்கட்டத் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் அவரின் சொந்த ஊரில் கொண்டாட்டம் கலைக்கட்டத் தொடங்கியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பாஞ்ச் மாவட்டம், ராய்ரங்கபூரில் மக்கள் இனிப்புகளை வழங்கி, ஆடிப்பாடி முதல்கட்ட கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய குடியரசு தலைவருக்கு சம்பளம் எவ்வளவு .? அவருக்கு உள்ள சலுகைகள், அதிகாரங்கள் என்ன தெரியுமா.?
ஜனாதிபதித் தேர்தலில் முர்மு அதிகமான வாக்குகள் முன்னிலையுடன் நகர்ந்து வருவதால், அவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முர்மு சொந்த கிராம மக்கள், அவர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இனிப்புகளை தயார் செய்து வைத்துள்ளனர். பாரம்பரிய பழங்குடியினர் நடனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரெளபதி முர்முவின் வெற்றியை பாஜகவும் கொண்டாட ஆயத்தமாகி வருகிறது. முர்மு கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி தபன் மகந்தா கூறுகையில் “ முர்முவின் வெற்றியைக்கொண்டாட 20ஆயிரம் லட்டு தயார் செய்யப்பட்டுள்ளது, 100 பேனர்கள் அடிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவி்த்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் சுற்றில் 508 வாக்குகளுடன் திரெளபதி முர்மு முன்னணியில் உள்ளார். எம்எல்ஏக்கள் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிலும் முர்மு முன்னிலையுடன் நகர்ந்து வருகிறார்.
முர்மு வெற்றியைக் கொண்டாட ஒடிசாவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் முர்மு கிராமத்துக்கு செல்லத் திட்டமிட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக நாட்டின் முதல்குடிமகளாக வருவது அந்த மாநில மக்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
இன்னும்சில மணி நேரங்களில் நாட்டின் 15-வது ஜனாதிபதியார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வெற்றியாளர் அறிவிக்கப்படும் முன்பே முர்மு சொந்த ஊரில் கொண்டாட்டம் கலைகட்டும் நிலையில் அறிவிப்புப்புக்குபின் திருவிழாவாக மாறும்.