முதல்முறையாக டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை.. வெளிநாடு எதுவும் செல்லாத நிலையில் பாதிப்பு..

By Thanalakshmi V  |  First Published Jul 24, 2022, 11:43 AM IST

டெல்லியிலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லியில் ஒருவருக்கு உறுதியாகியுள்ளது. எனவே இந்தியாவில் இதுவரை மொத்தம் 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தலைநகர் டெல்லியில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர் வெளிநாடு எதுவும் செல்லாத நிலையில், குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். 34 வயதான் நபருக்கு குரங்கும்மை ஏற்பட்டுள்ளது. உலகில் இதுவரை 70 மேற்பட்டு நாடுகளில் குரங்கம்மை தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குரங்கம்மை தொற்றை உலக சுகாதார அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Tap to resize

Latest Videos

click me!