இன்றுடன் நிறைவடையும் குடியரசுத் தலைவர் பதவி.. நாட்டு மக்களிடையே பிரியாவிடை உரை..

Published : Jul 24, 2022, 11:20 AM ISTUpdated : Jul 24, 2022, 11:21 AM IST
இன்றுடன் நிறைவடையும் குடியரசுத் தலைவர் பதவி.. நாட்டு மக்களிடையே பிரியாவிடை உரை..

சுருக்கம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்று நிறைவு பெறுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இன்று மாலை அவர் உரையாற்றுகிறார். இதனிடையே நாளை புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பொறுப்பேற்கிறார்.  

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவதால், நேற்று அவருக்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில்  பிரதமர் மோடி குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர், எம்.பிக்கள் கலந்துக்கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எம்.பி.க்கள் கையெழுத்திட்ட புத்தகம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் குடியரசு தலைவராக பதிவி ஏற்றுக்கொண்டேன். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில். நாடாளுமன்றத்தில் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எனவே விவாதத்தின் போது எம்.பிக்கள் காந்தியக் கொள்கையை பின்பற்ற வேண்டும்.  நாட்டு நலனை கருத்தில் கொண்டு அரசிய கட்சிகள் சமூக நிதி பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க:மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?

மேலும் அனைத்து எம்.பி.க்களுக்கும் என் மனதில் சிறப்பான இடம் உண்டு. நாம் அனைவரும் நாடாளுமன்ற குடும்ப உறுப்பினர்கள். எனவே நாடு என்ற கூட்டுக் குடும்பத்தின் நலனுக்கு முன்னூரிமை கொடுத்து, தொடர்ந்து செயலாற்றுவதாக இருக்க வேண்டும் என்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால் அது அமைதியான வழியில் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடு வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. கிராமங்களில் இருக்கு மக்களுக்கு கான்கீரிட் வீடு, மின்சாரம், கழிப்பறை போன்ற வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் கடந்த 1    8 மாதங்களில் 200கோடி தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், உலகமே இந்தியாவை பாராட்டுவதாக கூறினார். மேலும் இறுதியாக பதவிக்காலத்தில் எனக்கு ஆதரவு அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சர்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

மேலும் படிக்க:செஸ் ஒலிம்பியாட்டுக்கு எனக்கு அழைப்பிதழ் வரல.. இருந்தாலும்... பெருந்தன்மையாக பேசிய தமிழிசை சவுந்திரராஜன்.!

குடியரசுத் தலைவராக சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்தார். புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.  இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்று நிறைவு பெறுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அவர் இன்று மாலை பிரியாவிடை உரையாற்றுகிறார். மேலும் நாளை புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பொறுப்பேற்கிறார்.

PREV
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்