
மத்திய அரசின் நடவடிக்கையால் ரூ.4 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கெஜ்ரிவால் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெட்கமில்லாத பொய்கள் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.
மேலும், தலைநகரில் வதந்தியை பரப்பும் வணிகராக கெஜ்ரிவால் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையால் 4 லட்சம் கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்புக்காக ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, பெரு முதலாளிகளுக்குதான் சாகதமாக இருக்கும் என்றும், ரூபாய் ஒழிப்பு திட்டம் முன்கூட்டியே பாரதிய ஜனதா தலைவர்களுக்கு தெரியும் என்றும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறாா்.