“இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற விருப்பம்..!!!” ‘டிரம்ப்பிற்கு மோடி வாழ்த்து’

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 06:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
“இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற விருப்பம்..!!!” ‘டிரம்ப்பிற்கு மோடி வாழ்த்து’

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் 276 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 45-வது அதிபராக தேர்வாகியுள்ளார்.

டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில்,                                   

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 45-வது அதிபராக தேர்வாகியுள்ள  டொனல்ட் டிரம்ப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

இந்தியா - அமெரிக்கா இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாகவும் மோடி. தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Diwali Train Ticket Booking Opening: தீபாவளிக்கு ரயில்ல ஊருக்கு போறீங்களா?! முன்பதிவு தொடங்க போகுது.! மறந்துடாதீங்க.!