5 நாட்களுக்கு பேங்க் விடுமுறை…!!!! – இடையில் ஒரு நாள் தான் வேலை செய்யும்.... “உஷார்...!!!”

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 06:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
5 நாட்களுக்கு பேங்க் விடுமுறை…!!!! – இடையில் ஒரு நாள் தான் வேலை செய்யும்.... “உஷார்...!!!”

சுருக்கம்

இந்தியாவில் 500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்  நேற்றிரவு முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

மேலும், இன்று மற்றும்  நாளையும்  வங்கி மற்றும்  ஏ.டி.எம்  மையங்கள் இயங்காது  என  அறிவித்ததால், நேற்றிரவு  ஏ.டி.எம்  சென்டர்களில், மக்களின்  கூட்டம்  அலை  மோதியது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இன்று ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இது தற்காலிகமானது தான் என்றும் நவம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு தான் நாம் ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும்.

அதாவது இன்றும் நாளையும் ஏ.டி.எம்.கள் வங்கிகள் இயங்காது. 11 முதல் பணம் டெபாசிட் செய்யலாம் என அறிவித்ததில் ஒரு சிக்கல் உள்ளது. இதில் இடையில் நவம்பர் 11-ம் தேதி மட்டுமே வங்கிகள் இயங்கும். இதற்கு அடுத்த நவம் 12, 13, 14ம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

     Bank closed

November 9 , 10

Bank closed

 

November 11 

 working

November 12

2nd Saturday

 

November 13

Sunday

 

November 14

Guru nanak jayanti

 

 

11ம் தேதி மட்டுமே வங்கிகள் இயங்கும் என்பதால் பணம் எடுக்க வேண்டியவர்கள் அனைவரும் வங்கிகளில் திரளாக ஒன்று கூடுவார்கள்.

அனைவரும் ஒன்று திரண்டால் வங்கிகள் ஸ்தம்பித்து போய்விடும் அபாயம் உள்ளது.

5 நாட்கள் விடுமுறை அளித்துவிட்டு,  2 நாட்கள் மட்டும் தான் வங்கி விடுமறை அதன்பின்னர் பணம் எடுத்து கொள்ளலாம் என  கூறியிருக்கும் மோடியின் பிளான் பலே…!!

இந்நிலையில், எதிர்கட்சிகளின் நெருக்குதல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

இரண்டாவது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் செயல்படும் என்றும், 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள வசதியாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூட்ட நெரிசலை  கட்டுபடுத்த சிறப்பு ஏற்பாடு செய்யபடும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.எனவே பொதுமக்கள் இது குறித்து பீதியடைய தேவையில்லை.

அண்மையில் ஞாயிற்றுகிழமையில் வங்கிகள் செயல்படுவது இதுவே முதன்முறையாகும்.

 

PREV
click me!

Recommended Stories

பெற்றோர் எதிர்ப்பு.. போலீஸில் தஞ்சம்.. காதலனை கரம் பிடித்த கும்பமேளா வைரல் அழகி மோனலிசா!
ஜாக்கிரதை.! உங்கள் செல்போன் சிக்னல் துண்டிக்கப்படலாம்? LPG தட்டுப்பாட்டால் முடங்குகிறதா இந்திய டெலிகாம் துறை?