கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி அவசர நிலை காரணமாக 21 மாதங்கள் எதிர்க்கட்சிகள் இரும்புக்கரம் கொண்டு ஒதுக்கப்பட்டனர்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சர்தார்ஜி, ஸ்வாமிஜி என பல வேடங்களில் பிரதமர் மோடி இளைஞராக இருந்த போதுது தோற்றத்தை மாற்றி அலைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி அவசர நிலை காரணமாக 21 மாதங்கள் எதிர்க்கட்சிகள் இரும்புக்கரம் கொண்டு ஒதுக்கப்பட்டனர்.
undefined
இதையும் படிங்க: உங்கள் பாட்டி செய்த சித்திரவதை.. ராகுல் காந்தி மறந்துட்டீங்களா.. உள்துறை அமைச்சர் அமித் ஷா காட்டம்!
அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பிரதமர் மோடி இருந்தார். அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக மக்களைத் திரட்டும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருந்தது.
ஆகையால் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் போலீசில் சிக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதன் காரணமாக பிரதமர் மோடி போலீசில் சிக்காமல் இருக்க குஜராத்தின் பல பகுதிகளில் காவி உடை அணிந்து துறவியை போலவும், சீக்கியரைப்போல தலையில் டர்பன் அணிந்தும், ஸ்வாமிஜி என பல வேடத்தில் சுற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க: இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது! பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்களுக்கு நவீன் பட்நாயக் உத்தரவு!
இதுதொடர்பான விவரங்களை மோடி ஆர்கைவ் என்ற எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி எக்ஸ் தளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவசரநிலைக் காலத்தில் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை எதிர்த்தனர். மிகவும் சவாலான இருண்ட காலம் அது. அந்த நேரத்தில் பல தலைவர்களுடன் பணிபுரியும் அனுபவம் எனக்கு கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.