"குண்டர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் கொடுக்க கூடாது... பினாமி பணமும் டெபாசிட் செய்யகூடாது" - மோடி எச்சரிக்கை

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 03:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
"குண்டர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் கொடுக்க கூடாது... பினாமி பணமும் டெபாசிட் செய்யகூடாது" - மோடி எச்சரிக்கை

சுருக்கம்

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதன் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை முடக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, குருவிபோல பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அவசர தேவைக்கு வங்கிக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே பணத்தை வைத்திருந்தவர்களும், வங்கியில் கணக்கு இல்லாமல் பணத்தை வைத்திருந்தவர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், தற்போது வங்கியில் பணத்தை செலுத்தினால், அதற்கு வருமான வரித்துறையினர், வரி செலுத்தும்படி கூறுவார்கள் என திணறி வந்தனர்.

அதே வேளையில் மத்திய அரசின் அறிவிப்பில், பெட்ரோல் பங்க்குகளில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என கூறினார். ஆனால், அதிலும் சில கமிஷன் ஏஜென்ட்டுகள் தலையீட்டால், மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக ஒரு 500 ரூபாய் நோட்டை மாற்றி கொடுக்க 10 சதவீதம் கமிஷன் பெறுகின்றனர். அதாவது ரூ.50 கமிஷன். இதனால், கையில் உள்ள சுமார் 10,000 ரூபாயை மாற்றுவதற்கு, சர்வ சாதாரணமாக சில நிமிடங்களில் 1000 ரூபாய் சம்பாதிக்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு, பொதுமக்களுக்கு, மேலும் ஒரு இனிய தகவலை அறிவித்துள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.4000 வரை வங்கியில் மாற்றி கொள்ளலாம். 

உங்களது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒர உச்ச வரம்பும் இல்லாமல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கி அல்லது, தபால் நிலையத்தில் டெபாசிட் செய்யலாம்.

தொடக்கத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் அலலது ஒருவாரத்துக்கு ரூ.20 ஆயிரம் வரை எடுக்கலாம். இந்த உச்ச வரம்பு சிலநாட்களுக்கு பிறகு உயர்த்தப்படும்.

அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் உங்களது அடையாள அட்டையை காண்பிப்பதன் மூலம் நீங்கள் வரும் 24ம் தேதி வரை ரூ.4000 வரை பழைய ரூபாயய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.

செக், டிடி, டெபிட், அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்க்கிங் மூலம் நிதி மாற்றம் எந்த வகையிலும் பணத்துக்கு தடையில்லை. இவற்றை பயன்படுத்த நாங்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.

ஏடிஎம்களில் 18ம் தேதி வரை ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.2000 வரையும், 19ம் தேதி வரை ரூ.4000 வரையும் எடுக்கலாம். இவை வரும் நாட்களில் உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் கமிஷன் ஏஜென்டுகளாக செயல்படும் குண்டர்களிடம் சிக்கி, கஷ்டப்பட்டு சம்பாதித்த உங்கள் பணத்தை விரயமாக்க வேண்டாம்.

அதேநேரத்தில் ஏமாற்றுபவர்கள், போலி ஆசாமிகள் அல்லது வதந்தி பரப்புபவர்களை நம்பி உங்களது பணத்தை கொடுக்க வேண்டாம். அதேபேல், உங்களது வங்கி கணக்கில் முகம் தெரியாத யாருடைய பணத்தையும் டெபாசிட் செய்ய வேண்டாம் என கூறியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்: 21 நாட்கள் கட்டாய இடைவெளி
குடியரசுத் தலைவரை அவமதித்ததா மேற்கு வங்க அரசு? பிரதமர் மோடி கண்டனம்! மம்தா விளக்கம்!