ராகுல் காந்தி மீதான அவறூது வழக்கில் இன்று சூரத் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கக்கூடும். முன்னர் வழக்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால் அவர் மீண்டும் எம்.பி.யாக முடியும்.
அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு திருடர்களின் பெயர்கள் எல்லாம் மோடி என்று முடிவது ஏன்? எனப் பேசினார்.
இந்தப் பேச்சைக் கண்டித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்ற மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்தத் தீர்ப்பு அவதூறு வழக்கில் அளிக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையாகும். இதனால், மறுநாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரிட்டன் பள்ளிகளில் இந்து வெறுப்பு அதிகரிப்பு: ஹென்றி ஜாக்சன் சொசைட்டி ஆய்வில் தகவல்
சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அவற்றில் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும், மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும்வரை, குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்வும் கோரியுள்ளார்.
ராகுல் காந்தியின் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, அவரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரும் மனு குறித்து பதில் அளிக்குமாறு, அவதூறு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடிக்கு உத்தரவிட்டார்.
एयरपोर्ट सेठ के, पोर्ट सेठ के,
बिजली सेठ की, कोयला सेठ का,
सड़कें सेठ की, खदानें सेठ की,
ज़मीन सेठ की, आसमान सेठ का
सेठ किसका? सेठ ‘साहेब’ का! pic.twitter.com/qUIRYOrtOO
இதனையடுத்து ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீமா, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடக்கவில்லை எனவும் அதிகபட்ச தண்டனை விதிப்பதற்கு அவசியம் இல்லை எனவும் வாதிட்டார்.
ஸ்டார் தலைவர்களை களமிறக்கும் பாஜக! அனல் பறக்கும் கர்நாடக தேர்தல் பிரச்சாரம்!
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், சூரத் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியைக் குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால் அவர் மீண்டும் எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைக்கும்.