கடும் பனிமூட்டம்...!!! செல்போனிலேயே உரை நிகழ்த்திய மோடி

 
Published : Dec 11, 2016, 03:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
கடும் பனிமூட்டம்...!!! செல்போனிலேயே உரை நிகழ்த்திய மோடி

சுருக்கம்

கடும் பனிமூட்டம் காரணமாக பாஜகவின் பரிவர்தன் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத மோடி தொலைபேசி வழியாக பொதுமக்களிடையே உரை நிகழ்த்தினார்.

பிரதமர் மோடி குஜராத்தில் நடைபெற்ற பலவேறு நிகழ்சிகளில் பங்கேற்ற பின்னர் உ.பி பாநிலம் சென்றார்.

அங்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பரிவர்தன் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை.

இந்நிலையில் தொண்டர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் மோடி தொலைபேசி வழியாக பொதுமக்களிடையே உரையாற்றினார்.

உ.பி மாநில பாஜக நிர்வாகி ஒருவர் தனது செல்போனை மைக் அருகே பிடித்தவுடன் அதன் வழியாக மோடி பேசினார்.

அப்போது தனது அரசு எப்போதும் ஏழைகளின் பின்னே தன் இருக்கும் என்றும் அவர்களை தாம் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த நூதன உரை அங்கிருந்த பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!