பிரதமர் மோடியின் பேச்சு; கல்லா கட்டும் ஓட்டல், பார்கள்

First Published Dec 31, 2016, 3:02 PM IST
Highlights
பிரதமர் மோடியின் பேச்சு; கல்லா கட்டும் ஓட்டல், பார்கள்

ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு முடிந்து 50 நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு உரையாற்ற உள்ளார்.

புத்தாண்டு பரிசாக ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதை கேட்பதற்காக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகியுள்ள ஓட்டல்கள், பார்கள், மோடியின் பேச்சை விளம்பரப்படுத்தியுள்ளன.

 கள்ளநோட்டுகளையும், கருப்புபணத்தையும் ஒழிக்க, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். 50 நாட்கள் மக்கள் பொறுமையுடன் இருந்தால், டிசம்பர் 30-ந்தேதிக்கு பின் நல்ல எதிர்காலத்தை காட்டுவேன் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

அதன்படி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 7.30 மணி அளவில் டி.வி.யில் தோன்றி உரையாற்றுகிறார். புத்தாண்டுக்கு முதல் நாள் பிரதமர் மோடி உரையாற்றுவதால், புத்தாண்டு கொண்டாட்டத்தோடு சேர்த்து, மோடியின் உரையையும் மக்கள் ரசிக்க வைக்க சில ஓட்டல்கள், பார்கள் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர்.

இதற்காக பிரதமர் மோடி உரையாற்றும்போது நேரடி ஒளிபரப்பு தெரியும் வகையில், சில பார்கள், ஓட்டல்களில் மெகா திரை உருவாக்கப்பட்டு மக்கள் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஓட்டல், பார்கள் நிர்வாகத்தினர் பெரிய அளவில் விளம்பரம் செய்து, புத்தாண்டை பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டுக்கொண்டே கொண்டாடுங்கள் என்று விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த விளம்பரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் வகையில், ஏராளமான மக்கள் ஓட்டல், பார்களில் டேபிள்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து டெல்லியில் உள்ள சோசியல் கேபே மற்றும் பாரின் மேலாளர்சித்தார்த்குமார் கூறுகையில், “பிரதமர் மோடியின் பேச்சைக் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஆர்வமாக இருக்கிறோம். 2 மாதங்களாக வங்கிகள், ஏ.டி.எம்.களில்காத்துக்கிடந்த மக்களுக்கு மோடி ஏதேனும் புதிய சலுகைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். புத்தாண்டு கொண்டாட வரும் மக்களும் சேர்ந்து மோடியின் பேச்சைக் கேட்டால் நன்றாக இருக்குமே என இந்த திட்டத்தை கொண்டு வந்தோம். நல்ல வரவேற்பு இருக்கிறது''

இதேபோல டெல்லியில் உள்ள கன்னாட் பேலஸ் பகுதயில் உள்ள தி வால்ட் கேபேஒட்டலின் மேலாளர் கமலாஜீத் கவுர்  கூறுகையில், “ புத்தாண்டு கொண்டாட்டத்தோடு, பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க இங்கு வரும் மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களே நேரடி ஒளிபரப்பு செய்யக் கேட்டார்கள். அதனால், ஒளிபரப்புகிறோம். இதை வெளிப்படையாக அறிவித்ததால், அதிகமானடேபிள்கள் புத்தாண்டுக்கு புக்கிங் ஆகிறது'' என்றார்.

மேலும், டெல்லியில் உள்ள தி பிளையிங் சாசர் கேபே உள்ளிட்ட பல நட்சத்திர ஓட்டல்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள அரங்குகளில்மெகா எல்.சி.டி. டி.விகளை வைத்து மோடியின் பேச்சை ஒளிபரப்ப தயாராகியுள்ளன.

click me!