பேச்சு போதாது மோடி; செயலில் காட்டுங்கள் - மம்தா பானர்ஜி ‘கிண்டல்’

 
Published : Jun 29, 2017, 08:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
பேச்சு போதாது மோடி; செயலில் காட்டுங்கள் - மம்தா பானர்ஜி ‘கிண்டல்’

சுருக்கம்

Modi not enough to speak Show active - Mamta Banerjee teasing

பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதை பிரதமர் மோடி வார்த்தைகளில் மட்டும் கூறுவது போதாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா  பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் சமர்பதி ஆசிரமத்தின் நூற்றாண்டு தினத்தில் நேற்று கலந்து கொண்ட பிரதமர் மோடி,” பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை படுகொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. சட்டத்தை கையில் எடுக்க தனி நபருக்கு அதிகாரம் இல்லை. காந்தியின் பூமியின் பசுவின் பெயரில் வன்முறைகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று  பேசி இருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில்  அறிக்கை வௌியிட்டார். அவரின் அறிக்கையில், ,“ பசுப் பாதுகாப்பு என்ற  பெயரில் நடக்கும் கொலைகளை ஏற்க முடியாது என்ற பிரதமர் மோடி வார்த்தைகள் மட்டும் பேசினால் போதாது. பசுவுக்காக மனிதர்கள் கொல்லப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், பசு பாதுகாப்பு கும்பலால் சமீபத்திய கொடூர செயல்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மற்றொரு டுவிட்டில், கூர்லாந்து கோரி 15 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவருவது குறித்து மம்தா டுவிட் செய்தார். அதில், “வங்காளம் என்றுமே பிரிக்கப்படாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன். காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியாத மத்திய பா.ஜனதா. அரசு, மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங்கில் கவனம் செலுத்துகிறது. எத்தகைய சதியாக இருந்தாலும், நாங்கள் ஒன்றுசேர்ந்து முறியடிப்போம்’’ என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!