
புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததாலும், வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் போதிய பணம் மக்களுக்கு கிடைக்காததாலும் பெரும் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த பணத்தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில், பிரதமரின் தலைமை செயலாளர் ரூபேந்திர மிஸ்ரா தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஏடிஎம்களில் அதிக அளவில் பணத்தை நிரப்புவது குறித்தும், பணத்த தட்டுப்பாட்டை குறைத்து, நோட்டுக்கள் விநியோகத்தை அதிகப்படுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்பட பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.