
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் மத்திய அரசின் திட்டத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16ம் தேதி தாெடங்கி டிசம்பர் 16ம் தேதி வரை நடக்கிறது.
இந்த கூட்டத் தொடருக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரம் நாடாளுமன்றத்தில் கிளப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.