சில்லறை இல்லையா..??? “டீ குடிக்கும் 7 ரூபாயை டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம் – டீக்கடையின் புதிய ட்ரெண்டு

Asianet News Tamil  
Published : Nov 14, 2016, 06:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
சில்லறை இல்லையா..??? “டீ குடிக்கும் 7 ரூபாயை டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம் – டீக்கடையின் புதிய ட்ரெண்டு

சுருக்கம்

500 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால் சில்லறைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி பொதுமக்கள் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் சில்லறைக்கு அவதிப்படும் நிலையில், டெல்லியில் உள்ள ஒரு தேநீர் கடையில் ஆன்லைன் பேமென்ட் வசதியை கடை உரிமையாளர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதற்காக டீக்கடை உரிமையாளர் ஒரு PAYTMகணக்கை தொடங்கியுள்ளார். டீ குடிக்கும் வாடிக்கையாளர்கள் 7ரூபாயை டீக்கடை உரிமையாளரின்  PAYTM கணக்ககிற்கு டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்திவிட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

சில்லறை கிடைக்காத இந்த நிலையில், டீக்கடை உரிமையாளர் அறிவித்துள்ள இந்த ஆன்லைன் பேமென்ட் வசதியால் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விண்வெளி நாயகனுக்கு வீர விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது.. மத்திய அரசு கெளரவம்!
மம்முட்டிக்கு பத்மபூஷன் விருது.. அச்சுதானந்தன் முதல் ரோகித் சர்மா வரை.. பத்ம விருதுகள் முழு லிஸ்ட்!