
பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
500 ரூபாய் புழகத்திற்கு வராமல் 2000 ரூபாய் மட்டும் புழக்கத்திற்கு வந்ததால் சில்லறைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் டெல்லி, போபால் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்றடைந்துள்ளது என கூறப்படுகிறது.
எனவே இந்த புதிய நோட்டுகள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஓரிரு நாட்களில் நாடு முழுவதும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில்லறை பிரச்சனை தீரும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.