நாளை கொண்டாட்டப்படுகிறது இந்திய அரசியல் சாசன தினம் : இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

 
Published : Nov 25, 2016, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
நாளை கொண்டாட்டப்படுகிறது  இந்திய அரசியல் சாசன தினம் : இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

சுருக்கம்

மாறிவரும் இன்றைய உலகில், பணம் இல்லா பொருளாதாரத்திற்கு இந்தியா மாற வேண்டும் என பிரதமர் திரு. நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கருப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் போர் வீரராக  திகழ்வதாக பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய அரசியல் சாசன தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் நடைபெற்ற நூல்​வெளியீட்டு விழாவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்திய அரசியல் சாசனத்தை நினைக்‍கும் எவரும், அதனை உருவாக்‍கிய டாக்‍டர் அம்பேத்கரை நினைவு கூராமல் இருக்‍க முடியாது என பிரதமர் குறிப்பிட்டார். அரசியல் சாசனத்தின் மேன்மையை வலியுறுத்தவும், இளைஞர்களிடையே அரசியல் சாசனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதாக சுட்டிக்‍காட்டிய பிரதமர், ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்தும் கருத்து தெரிவித்தார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்கட்சிகளின் விமர்சனத்தால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அரசின் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை ஏழைகளுக்கு உகந்ததாகும் என்றும், நியாயமாக சம்பாதித்த பணம் பத்திரமாக இருக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடியாதவர்கள்தான், தன்மீதும், தனது அரசு மீதும் குறை கூறுவதாக குற்றம் சாட்டிய பிரதமர் திரு. மோடி, கருப்புபணம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாட்டில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் போர்வீரராக திகழ்வதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்