“எதிர்கட்சிகள் தொடர் அமளி” – இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

 
Published : Nov 25, 2016, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
“எதிர்கட்சிகள் தொடர் அமளி” – இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

சுருக்கம்

புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து எதிர்கட்சியினர்  குளிர்கால கூட்ட தொடர் தொடங்கிய நாள் முதல் தொடர் அமளியில் ஈடுட்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து எதிர்கட்சியினர் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து எதிர்கட்சியினர் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரும் வரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது என்றும், பிரதமர் தலைமையில் கூட்டம் நடந்தால் மட்டுமே கலந்து கொள்வோம் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதையடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி அவைக்கு  வந்தால் மட்டுமே விவாதத்தை தொடங்குவோம் என கூறி எதிர்கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். எனவே, இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!