“பழைய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்..”

 
Published : Nov 25, 2016, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
“பழைய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்..”

சுருக்கம்

புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது, 

இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கைகளில் இருப்பு வைத்துள்ள பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் மாற்ற முடியாது என்றும், ஆனால் பழைய நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கிகளில் மட்டும் மாற்றிக்கொள்ளலாம் என்றும், நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை மாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!