“வெறும் “டீ” யுடன் முடிந்த திருமண விழா...!!!” – செலவு ரூ.500 மட்டுமே...!!

 
Published : Nov 25, 2016, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
“வெறும் “டீ” யுடன் முடிந்த திருமண விழா...!!!” – செலவு ரூ.500 மட்டுமே...!!

சுருக்கம்

கடந்த 8ம் தேதி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

திருமணம் போன்ற சுப நிகழ்சிகளும் நடத்த முடியாமல் சிரமப்படுவதாக புகார்கள் குவிந்ததையடுத்து, திருமணத்திற்காக 2.5 லட்சம் வரை வரை வங்கிகளிலிருந்து எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் பணம் எடுக்க வங்கிகளில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், இதற்கு பதில் திருமணத்தை ஒத்திவைப்பதே மேல் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் ஒரு திருமண ஜோடி வெறும் 500 ரூபாய் செலவில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த  விருந்தினர்களுக்கு வெறும், டீ மற்றும் தண்ணீரை மட்டும் கொடுத்து திருமண விருந்தை முடித்துக் கொண்டுள்ளனர். 

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வெறும் 500 ரூபாயில் திருமண விருந்தை முடித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!