அமெரிக்க பன்னாட்டு நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேமி டிமோன் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
மிகப்பெரிய அமெரிக்க வங்கியான ஜேபி மோர்கான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேமி டிமோன் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். டிமோன் மோடி அரசாங்கம் பல சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இந்தியாவில் "நம்பமுடியாத உள்கட்டமைப்பு மற்றும் கல்வி முறை" உள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ பிரதமர் மோடி இந்தியாவில் நம்ப முடியாத வேலையை செய்துள்ளார். அவர் 400 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளார். அவர் 700 மில்லியன் மக்களுக்கு வங்கிக்கணக்குகளை திறந்துள்ளார். அவர்கள் நம்பமுடியாத கல்வி முறையை கொண்டுள்ளனர். நம்ப முடியாத அளவு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.
விவிபேட் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி: அதிகாரிகள் ஆஜராக உத்தரவு!
இந்த ஒரு மனிதர் (பிரதமர் மோடி) கடினமானவர் என்பதால் அவர்கள் தங்கள் முழு நாட்டையும் உயர்த்துகிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் " இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அங்கு வரி முறை சிக்கலானது.. அது ஐரோப்பாவைப் போன்றது. இது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கிறது. ஆனால் மோடி அதை உடைக்கிறார். அவர் அதைத் தகர்த்தெறிந்தார். . அதுவும் இங்கே கொஞ்சம் தேவை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமெரிக்காவைப் பற்றி பேசுகையில், தேசிய கடன், பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் புவிசார் அரசியல் பதட்டங்கள் பற்றி கவலை தெரிவித்தார். பணவீக்கமும், அதைத் தொடர்ந்து அதிக வட்டி விகிதங்களும், எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்தியாவிலும் 50% பரம்பரை வரி.. காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக பதிலடி..
ராணுவ பலம், அரசியல் துருவமுனைப்பு மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டின் பொருளாதார செயல்திறன் போன்ற பரந்த கொள்கைப் பிரச்சினைகள் குறித்தும் டிமோன் பேசினார். "பயிற்சியாளர்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு செல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்," என்று டிமோன் கூறினார்.