140 கோடி இந்தியர்களை வேவு பார்க்க இஸ்ரேல் கருவிகளை வாங்கும் மோடி அரசு!

By SG BalanFirst Published Aug 30, 2023, 9:20 PM IST
Highlights

140 கோடி குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்தொடர்புகளை உளவு பார்க்க கண்காணிப்புக் கருவிகளை மோடி அரசு வாங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

காக்னிட் (Cognyte) மற்றும் செப்டியர் (Septier) ஆகிய இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து சக்திவாய்ந்த கண்காணிப்பு கருவிகளை வாங்கி நாட்டு மக்களை வேவு பார்க்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது என பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில நாளிதழின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு அமைப்பின் கேபிள் கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ளது என்றும் இது இந்தியாவின் பாதுகாப்பு முகமைகள் மற்றும் 140 கோடி குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்தொடர்புகளை உளவு பார்க்க உதவுகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos

ஆதித்யா எல்-1 சூரியனுக்கு எவ்வளவு பக்கத்தில் போகும்? இதற்கு முன் மிக அருகில் சென்று ஆய்வு செய்தது யார்?

இஸ்ரேலை தளமாகக் கொண்ட செப்டியர் (Septier) நிறுவனம் தனது வேவு பார்க்கும் தொழில்நுட்பத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டியர் நிறுவனத்தின் விளம்பர வீடியோவின்படி, அந்நிறுவனத்தின் உளவுத் தொழில்நுட்பம் குரல் பதிவு, மெசேஜ்கள், இன்டர்நெட் பயன்பாடு, மின்னஞ்சல் ஆகிய தகவல்களைச் சேகரிக்க உதவும் என்று தெரிகிறது.

மற்றொரு இஸ்ரேலிய நிறுவனமான காக்னிட் (Cognyte) இந்தியாவில் கண்காணிப்புக்கான தயாரிப்புகளை வழங்குகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களை தன்வசம் வைத்துள்ள மெட்டா நிறுவனம் 2021ஆம் ஆண்டில் காக்னிட் நிறுவனத்தின் மீது அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதில், இந்தியாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், பல நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளைக் கண்காணிக்க காக்னிட் உதவி செய்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது.

பல நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களில் பணிபுரிந்த நான்கு பேர் கூறியவை அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. "இந்தியாவில் நிலைமை அசாதாரணமானது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளிப்படையாகவே கண்காணிப்பு கருவிகளை கடலுக்கு அடியில் உள்ள லேண்டிங் நிலையங்கள் மற்றும் தரவு மையங்களில் நிறுவ வேண்டும் நிபந்தனையை அரசாங்கம் விதிக்கிறது" என்று அறிக்கை கூறுகிறது.

இந்த உளவு பார்க்கும் குற்றச்சாட்டு இந்தியா மீது மட்டும் இல்லை. உகாண்டா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் இதே போன்ற நிலை உள்ளது. 2013ஆம் ஆண்டில், எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் வெளியிட்ட ரகசியத் தகவல்களின்படி, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் உளவு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் மக்களை ரகசியமாகக் கண்காணிக்கின்றன என்று தெரியவந்தது.

பெகாசஸ் ஊழல்

2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மோடி அரசு பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பெகாசஸ் ஸ்பைவேர் பற்றி  அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஒரு இணைப்பு மூலம் மொபைல் போன்களை ஹேக் செய்து மின்னஞ்சல்கள், போன் கால் மற்றும் எஸ்.எம்.எஸ்.களை ரகசியமாகக்  செய்ததாக கூறியது.

Explained: டிராபிக் சிக்னல் விளக்குகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் மட்டும் இருப்பது ஏன்? காரணம் இதுதான்!

click me!