மோடி 3.0 அரசில் கேபினெட் அமைச்சர்கள் என்ன படிச்சுருக்காங்க? கல்வித்தகுதி என்ன தெரியுமா?

By SG Balan  |  First Published Jun 12, 2024, 5:34 PM IST

புதிதாகப் பதவியேற்ற மோடி 3.0 மத்திய அரசில் அமைச்சராக உள்ளவர்களின் கல்வித்தகுதி என்ன? அவர்கள் எங்கே, என்ன படித்தார்கள் என்ற விவரத்தைப் பார்க்கலாம்.


புதிதாகப் பதவியேற்ற மத்திய அரசில் அமைச்சராக உள்ளவர்களின் கல்வித்தகுதி என்ன? அவர்கள் எங்கே, என்ன படித்தார்கள் என்ற விவரத்தைப் பார்க்கலாம்.

ஜூன் 9ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) என்.டி.ஏ. கூட்டணி புதிதாகப் பதவியேற்றது. அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியானது. உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய நான்கு முக்கியமான இலாகாக்களில் எந்த மாற்றமும் இல்லை.

Tap to resize

Latest Videos

undefined

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் அமைச்சர் பதவி பெற்றுள்ளனர். தேர்தலை சந்திக்காத நிர்மலா சீதாராமன் (நிதித்துறை), எஸ். ஜெய்சங்கர் (வெளியுறவுத்துறை) இருவரும் கேபினெட் அமைச்சர்களாக உள்ளனர். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த எல். முருகன் இரண்டு துறைகளில் இணை அமைச்சராகியுள்ளார்.

பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்

நரேந்திர மோடி:

30 கேபினட் அமைச்சர்கள், 5 மாநில அமைச்சர்கள் சுயேச்சை பொறுப்பு, மற்றும் 36 இணை அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் பதவியேற்றனர். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி பணியாளர் நலன், அணுசக்தி, விண்வெளி ஆகிய துறைகளை தன்வசம் வைத்துள்ளார். இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை (MA) பட்டம் பெற்றாராம்.

அண்மையில் இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது 1982ஆம் ஆண்டு 'காந்தி' திரைப்படம் வெளியான பிறகுதான் மகாத்மா காந்தியைப் பற்றி உலகிற்குத் தெரிந்தது என்று பேசினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவருக்குத்தான் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என விமர்சனம் செய்திருந்தார்.

ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் இவர் 1971 இல் கௌரக்பூர் பல்கலைக்கழகத்தில் M.Sc முடித்தாராதம். 1969 இல் மிர்சாபூர் கவுரக்பூர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள K.B.P.G கல்லூரியில் B.Sc. முடித்தாராம்.

அமித் ஷா

உள்துறை அமைச்சரான அமித் ஷா, அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி படித்தாராம்.

நிதின் கட்கரி

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி நாக்பூர் பல்கலைக்கழகத்தில் M.Com மற்றும் LL.B. முடித்தவராம்.

ஜே.பி. நட்டா

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான நட்டா, சிம்லாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தவராம்.

எலான் மஸ்க் பதிவிட்ட தமிழ் பட மீம்! ஆப்பிள் - சாட்ஜிபிடி கூட்டணி மீது குவியும் விமர்சனம்!

சிவராஜ் சிங் சவுகான்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள இவர் போபால் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (தத்துவம்) படித்து தங்கப் பதக்கம் பெற்றவராம்.

நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சராகவும் கார்ப்பரேட் விவகார அமைச்சராகவும உள்ளார். இவர். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராம். 1984இல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். முடித்தாராம்.

எஸ். ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், அரசியல் அறிவியலில் எம்.ஏ., எம்.பில். முடித்தவராம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மனோகர் லால் கட்டார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சராகவும் மின்சாரத்துறை அமைச்சராகவும் உள்ள இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராம்.

ஹெச்.டி. குமாரசாமி

எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சராக இருக்கிறார். 1978-1979 கல்வியாண்டில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவராம். பெங்களூர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஜெயநகரில் உள தேசிய கல்லூரியில் படித்தாராம்.

பியூஷ் கோயல்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான கோயல் ஒரு பட்டயக் கணக்காளர். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவராம்.

தர்மேந்திர பிரதான்

கல்வி அமைச்சராகியுள்ள தர்மேந்திரப் பிரதான் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவராம்.

ஜிதன் ராம் மஞ்சி

இவர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர். மகத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தாராம்.

சர்பானந்தா சோனோவால்

இவர் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர். திப்ருகார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள திப்ருகர் ஹனுமான்பாக்ஸ் சூரஜ்மால் கனோய் கல்லூரியில் ஆங்கிலத்தில் பி.ஏ.(ஹானர்ஸ்) படித்தவராம். திப்ருகர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. ஃபார்ம் படித்து, கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஜே. பட்டம் பெற்றவர்.

ராம்மோகன் நாயுடு

விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராகியுள்ள நாயுடு அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தவர்.

எல்லாரும் 'மோடியின் குடும்பம்' என்பதை அகற்றுங்கள்: மோடி போட்ட திடீர் உத்தரவு ஏன்?

பிரகலாத் ஜோஷி

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக இருக்கிறார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகவும் உள்ளார். கர்நாடக பல்கலைக்கழகத்தில் 1983ஆம் ஆண்டு பி.ஏ. முடித்தவராம்.

கிரிராஜ் சிங்

இவர் ஜவுளித்துறை அமைச்சர். 1971 இல் மகத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராம்.

அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே மற்றும் தகவல் ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் அமைச்சராக இருக்கிறார்.  2010 இல் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் வணிகப் பள்ளியில் MBA முடித்தவராம். முன்னதாக 1992 இல் ஜோத்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள MBM பொறியியல் கல்லூரியில் BE படிப்பையும் 1994 இல் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தில் M.Tech படிப்பையும் முடித்துள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா

தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகவும் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் உள்ளவர். ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவர். கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸஸில் சி.ஏ. முடித்தவர்.

பூபேந்தர் யாதவ்

இவர் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர். 1993ஆம் ஆண்டு அஜ்மீர் அரசு கல்லூரியில் (அஜ்மீர் பல்கலைக்கழகம்) எல்.எல்.பி. முடித்தவர்.

கஜேந்திர சிங் ஷெகாவத்

சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகியுள்ள இவர், ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் M.A. பட்டத்தை 1989ஆம் ஆண்டு பெற்றார். முன்னதாக, அதே பல்கலைக்கழகத்தில் 1987ஆம் ஆண்டு B.Ed முடித்தார்.

அன்னபூர்ணா தேவி

இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர். இவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

கிரண் ரிஜிஜு
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ள இவர் டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சட்ட மையத்தில் எல்.எல்.பி. முடித்துள்ளார்.

ஹர்தீப் சிங் பூரி

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சரான இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

மன்சுக் மாண்டவியா
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உள்ள இவர், பாவ்நகர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவராம்.

கிஷன் ரெட்டி

இவர் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர். இவர் சிஐடிடியில் கருவி வடிவமைப்பில் டிப்ளமோ முடித்தவர்.

சிராக் பாஸ்வான்

உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான இவர், ஜான்சியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் கணினிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.

சி ஆர் பாட்டீல்

ஜல் சக்தித்துறை அமைச்சரான இவர், சூரத் ஐடிஐயில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவராம்.

எல். முருகன்

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை  இணை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராகவும் பதவியேற்றுள்ள இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2019ஆம் ஆண்டு சட்டத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

புதிய சர்ச்சையில் எலான் மஸ்க்! பயிற்சிப் பணிக்கு வந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்தாரா?

click me!