Amartya Sen: CAA: சிஏஏ மூலம் முஸ்லிம்களை புறக்கணிப்பதற்கு இந்தியா ஒருநாள் வருத்தப்படும்: அமர்த்தியா சென் கவலை

By Pothy RajFirst Published Jan 14, 2023, 3:19 PM IST
Highlights

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்குவந்தால், நாட்டில் சிறுபான்மையினர் பங்களிப்பைக் குறைத்துவிடும், பெரும்பான்மையினரை ஊக்கப்படுத்தும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்குவந்தால், நாட்டில் சிறுபான்மையினர் பங்களிப்பைக் குறைத்துவிடும், பெரும்பான்மையினரை ஊக்கப்படுத்தும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!திரிபுராவில் பரமவைரி காங்கிரஸ்,சிபிஎம் தேர்தலுக்காக கைகோர்ப்பு

இந்தியாவின் தேசப் பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, சமூகத்தின் அனைத்து மக்களுக்கான அரசியல் மற்றும் அடையாளத்தை உருவாக்குவதர்காக உழைத்தார். 

நான் பார்த்தவரைக்கும் பாஜக கொண்டுவரும் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தால் நாட்டில் சிறுபான்மையினர் பங்களிப்பு, முக்கியத்துவம் குறைந்துவிடும். நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ இந்து பெரும்பான்மையினர் பங்களிப்பு, அழுத்தம் அதிகரித்துவிடும். இந்தசட்டம் சிறுபான்மையினரை குறைத்துமதிப்பிடுகிறது.

செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் வந்தே பாரத் ரயில்!பிரதமர் மோடி 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்

மதச்சார்பற்ற, சமத்துவ தேசமாக இருக்க வேண்டிய இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு குடியிருமைத் திருத்தச் சட்டம்  மிகவும் துரதிர்ஷ்டமானது, வங்கதேசம் அல்லது மேற்கு வங்காளத்தில் இருந்து வந்தவர்களை,  வெளிநாட்டினராக அல்லது உள்நாட்டவராக அறிவித்து பாரபட்சமான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்வடுவது துரதிர்ஷ்டமானது. இது மிகவும் இழிவான, அடிப்படையில் மோசமான நடவடிக்கை என நான் கருதுகிறேன்

பாஜக அரசின் செயல்பாடுகள் மேம்பட்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு இந்தியருக்கும் சில உரிமைகள் உள்ளன, அவர்கள் தேசத்தின் உறுப்பினராக இருந்து வந்தவர்கள் என்ற அங்கீகரிப்பதுதான் தேசத்துக்குத் தேவை அதைத்தான் மகாத்மா காந்தி செய்ய முயன்றார்.

11 நாட்கள் தலைமறைவு! ‘சான்ட்ரோ’ ரவியை குஜராத்தில் கைது செய்தது கர்நாடக போலீஸார்

ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையே மோதலை மகாத்மா காந்தி உருவாக்கவில்லை. மகாத்மா காந்தி தீவிரமான இந்து மதத்தைப் பின்பற்றவராக இருந்தாலும், சுதந்திரத்துக்குப்பின், முஸ்லிம்களுக்கு அதிகமான உரிமை அளிப்பதில் தீவிரமாக இருந்தார்.

மகாத்மாவின் அந்த முயற்சி நேர்மையான கலாச்சாரத்தை, அரசியல் பிரதிநிதித்துவத்தை, தேசிய அடையாளத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். ஆனால், சிறுபான்மையினரை ஒதுக்குவதற்கு, புறம்தள்ளுவதற்கு ஒருநாள் இந்தியா வருத்தப்படும்.

இவ்வாறு அமர்த்தியா சென் தெரிவித்தார்

குடியுரிமைத் திருத்தச்சட்டம் என்பது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், இன்னும் விதிகள் வகுக்கப்படவில்லை. இந்தச்ச ட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் சிறுபான்மை மக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!