
15 இந்தியர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த குவைத் அரசுக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டில் 15 இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இதற்கு இந்தியா தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்தியா பரிந்துறை செய்தது.
இதையடுத்து 15 இந்தியர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 இந்தியர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த குவைத் அரசுக்கு நன்றி எனவும், 119 இந்தியர்களின் தண்டனை காலத்தையும் குவைத் அரசு குறைந்த்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்காக அந்நாட்டு மன்னருக்கு நன்றியை தெரிவித்துள்ளார். குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுஷ்மா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.