
வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் கணக்கில் வராத பணத்திற்கு வரியும் அபராதமும் விதிக்குமாறு நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள், வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதில் 3 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கணக்கில் வராத பணத்துக்கு வரியும் அபராதமும் விதிக்குமாறு வங்கிகளுக்கு நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.